![]() |
வீடியோ எடிட்டிங் மென்பொருள் |
வீடியோ கேமிராவுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் போன்களால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்க முடியும் என்ற நிலை தற்பொழுது உருவாகி உள்ளது.
குறிப்பாக வெளிநாடுகள், வெளியிடங்கள், மற்றும் சுற்றுலா செல்வோர் தாங்களேவே தங்களது ஸ்மார்ட் போன்கள் மூலம் வீடியோக்களை எடுத்து வருகின்றனர். அதில் உள்ள தேவையற்ற பாகங்களை, இரைச்சல்களை நீக்குவதற்கு ஏதாவது இலவச மென்பொருள் கிடைக்குமா என தேடிப்பார்த்து, அதை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் மிக எளிதாக Video Editing செய்யப் பயன்படும் மென்பொருள் Video Pad. இந்த சுதந்திர மென்பொருள் - ன் இடைமுகம் (Interface) அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உள்ளது.
Professional video Editing (தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் ) செய்திடும் அளவிற்கு இதில் பல விதமான சிறப்பம்சங்கள் (Featured Effects) இடம்பெற்றுள்ளது.
முன்பெல்லாம் மூவி மேக்கிங் - Movie Making என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை. தற்பொழுது மூவி மேக்கிங் என்பது போகிற போக்கில் மிக எளிமையாக செய்ய முடிகிறது. அதற்கு காரணம் வீடியோ பேட் போன்ற மென்பொருட்கள்தான்.
VideoPAD | வீடியோ எடிட்டிங் சாப்ட்வேரில் உள்ள சிறப்பம்சங்கள்
( Features and Specifications)
VideoPAD | வீடியோ எடிட்டிங் சாப்ட்வேரில் உள்ள சிறப்பம்சங்கள்
( Features and Specifications)
- வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி
- Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி
- வீடியோவின் வேகத்தை சரி செய்யும் வசதி
- avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி
- 50 க்கும் மேற்பட்ட visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.
- TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி
- Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி
- வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி
- Youtube போன்ற வீடியோ இணைய தளங்களில் வீடியோக்களை பதிவேற்றும் வசதி
Video Pad டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Video Editor | VideoPad Software
1 Comments
பயனுள்ள பதிவு நண்பரே..
ReplyDeleteComment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.