ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்யும்போது இடையில் ஏதேனும் தடை ஏற்பட்டால், விட்டுப்போன இடத்திலிருந்து டவுன்லோடை தொடர உதவும் மென்பொருள்தான் டவுன்லோட் மேனேஜர்.
உதராணமாக ஒரு மென்பொருள் அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் ஒரு தரவை டவுன்லோட் செய்யும்போது திடீரென இணைய இணைப்பு (Internet Connetion) அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், பாதியில் தரவிறங்கியதை மீண்டும் பெற முடியாது.
மீண்டும் புதியதாகதான் டவுன்லோட் செய்ய வேண்டும்.
டவுன்லோட் மேனேஜர் மென்பொருள் இருந்தால், எதுவரைக்கும் தரவு டவுன்லோட் ஆகியதோ, அதிலிருந்து மீண்டும் டவுன்லோடை தொடரமுடியும்.
அந்த வகையில் பயன்மிக்க எளிதான டவுன்லோட் மேனேஜர் மென்பொருள்தான் Eagle Get Download Manager.
இது ஒரு Universal டவுன்லோட் மேனேஜர் மென்பொருள். இதன் மூலம் HTTP, HTTPS, FTP, MMS and RTSP protocols - களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்ய முடியும்.
குறிப்பாக YouTube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ இணையதளங்களிலிருந்து HD மற்றும் HTML 5 Video க்களை மிக எளிதாக டவுன்லோட் செய்திடலாம்.
பயன்படுத்த மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் (கட்டமைப்பு) கொண்ட இந்த சாப்ட்வேர் மூலம் வீடியோக்கள் மட்டுமன்றி, Music, documents மற்றும் applications ஆகியவற்றையும் ஒரே கிளிக்கிள் டவுன்லோட் செய்திடலாம்.
முன்னணி பிரௌசர்களான Chrome, IE, Firefox, Opera and Maxthon போன்றவற்றில் இணைந்து செயலாற்றுகிறது. Multiple threads முறையில் இம்மென்பொருள் கோப்புகளை டவுன்லோட் செய்வதால், கோப்புகள் - மென்பொருட்கள் விரைவாக டவுன்லோட் செய்யப்படுகிறது.
இது முற்றிலும் இலவசம். இதன் மூலம் வைரஸ், மால்வேர் போன்ற புரோகிராம்கள் எதுவும் இணைந்து வருவதில்லை. எனவே நம்பிக்கையுடன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் மூலம் டவுன்லோட் செய்யவிருக்கும் பைல்களை வைரஸ் Scan செய்கிறது. இதனால் டவுன்லோட் செய்யப்படும் கோப்புகளில் ஏதேனும் வைரஸ் இருந்தால் கண்டுபிடிக்க முடிகிறது. பயன்மிக்க இந்த டவுன்லோட் மேனேஜர் மென்பொருளைத் டவுன்லோட் செய்ய சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EagleGet download manager main Features:
- Accelerate downloads by using multi-threaded technology
- Download online videos from popular sites such as Youtube, Dailymotion, Vimeo...
- Optimized for YouTube HD and HTML5 web videos
- Support MMS, HTTP, HTTPS, FTP and RTSP protocols
- Support HTTP and SOCKET proxy
- Batch downloads function
- Download files in Chrome, IE, Firefox, Opera and Maxthon with one click
- Automatic run virus scan after download
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.