சந்தி பிழை திருத்தும் இணையச் செயலி

இணையத்தில் எத்தனையோ பயன்மிக்க சேவைகள் உள்ளன. கணக்கீடுகளைச் செய்ய, ஓவியம் வரைய, தமிழில் எழுதியவைகளை பேச்சுத் தமிழாக கேட்க என இலவச இணையச்சேவைகள் நிரம்ப உள்ளன.

அதுபோல தமிழில் எழுதுவதற்கும் இணைய வழிக் கருவிகள் (online tools) உள்ளன. ஆனால் தமிழ் திருத்தி செயலிகள் (Tamil Editor applications) மிக குறைவு. அந்த வகையில் தமிழில் உள்ள சந்திப்பிழைகள், மரபு பிழைகள், ஒற்றுப்பிழைகளை திருத்தவென ஒரு அரிய, அற்புதமான இணையச்செயலியை வடிவமைத்து வழங்கியுள்ளனர்.

தமிழ் வாக்கியங்களில் உள்ள சந்திப் பிழைகளை நீக்கவும், மரபு பிழைகளைக் கண்டறியவும் பயன்படுகிறது இச்செயலி.

tamilil-santhi-pilai-thiruthum-software
இதன் மூலம் தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்த முடியும். ஒற்றெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள், மரபு பிழைகள், வடமொழிச் சொற்கள் போன்ற பிழைகளை கண்டறியலாம்.

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் செயலியைப்பற்றி அறிய

இலக்கண விதிப்படி எந்தெந்த இடங்களில் ஒற்றெழுத்து வரும், எந்தெந்த இடங்களில் ஒற்றெழுத்து வரக்கூடாது என்பதை நிர்ணயித்து காட்டுகிறது.

பயன்படுத்தும் முறை:

கீழுள்ள சுட்டியை சொடுக்கித் தோன்றும் இணையப்பக்கத்தில் உள்ள கட்டத்தில், நீங்கள் தட்டச்சிட்ட தமிழ் வாங்கியங்களை அதில் உள்ளிடவும். பிறகு  கட்டத்திற்கு கீழுள்ள "ஆய்வு செய்" என்ற பொத்தானை அழுத்தவும்.

பரிந்துரை,  சந்தேகிப்பவை, ஒற்றுப்பிழை, மரபுப்பிழை, என நீங்கள் உள்ளிட்ட வாக்கியங்களில் உள்ள பிழைகளை எண்ணிகையுடன் வகைப்படுத்திக் காட்டும்.

நான் உதாரணத்திற்காக இப்பதிவின் தலைப்பை அதில் "தமிழில் சந்தி பிழை திருத்தும் இணைய செயலி" என கொடுத்து ஆய்வு செய் பொத்தானை அழுத்தியதும், அதில் ஒரு ஒற்றுப்பிழையை சுட்டிக்காட்டியது. இறுதியாக சம்மதம் என பொத்தானை அழுத்தியுவுடன், "தமிழில் சந்தி பிழை திருத்தும் இணையச் செயலி" என திருத்தப்பட்ட வாங்கியத்தை காட்டியது.

பிழைகளைக் காட்டும் வார்த்தைகளின் மீது சொடுக்கினால், அதற்கான இலக்கண விதிகளைச் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

மிகவும் பயனுள்ளதாக இந்தச் செயலி அமைந்துள்ளது.

நீங்களும் உங்களது தமிழ் வாக்கியங்களில் உள்ள சந்திப்பிழைகளைத் திருத்தவும், பிழைகளை அறிந்துகொள்ளவும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

சந்திப் பிழை திருத்திக்கான சுட்டி: http://dev.neechalkaran.com/p/naavi.html#.Uyf4VvGSzHT

Tags: Tamil editing program, Tamil grammar correction tool, Tamil Grammar tools, Tamil Grammar correction, Tools for Tamil Grammar.

Post a Comment

0 Comments