கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer)

ஒரு புதிய கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறோம். அது அதி வேகமாக செயல்படுகிறது. அதுவே நாள் ஆக.. ஆக.. அதனுடைய செயல்படும் வேகம் குறைகிறது. என்ன காரணம்? பொதுவாக,

1. அதிகமான ஃபைல்கள் அதில் அடைந்திருப்பது.
2. அளவுக்கு அதிகமான மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது
3. வைரஸ் பிரச்னை.

போன்ற காரணங்களை கூறுவார்கள். அது மட்டுமா கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணம்? நிறைய விடயங்கள் இருக்கிறது. முழு முதற் காரணங்களாக வேண்டுமானால் முன் குறிப்பிட்ட மூன்று காரணங்களை கூறலாம்.

ஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்றால் கூட கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையும்.

சரி.. என்ன செய்தால் கம்ப்யூட்டர் வேகத்தை புதிய கம்ப்யூட்டர் போல அதிகப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட இதுபோன்று செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும். 

கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணங்கள்:

கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு.

1. மிகவும் பழைய கம்ப்யூட்டராக இருப்பது. 
2. அதிகளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது.
3. கம்ப்யூட்டர் ரேம் Memory குறைவாக இருப்பது.
4. Hard Disk ல் பிரச்னை இருப்பது.
5. அளவுக்கு அதிகமான ஃபைல்கள் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்திருப்பது. 
6. வைரஸ் கம்ப்யூட்டரை தாக்கி இருப்பது.

போன்றவற்றை குறிப்பிடலாம். 


how to speedup computer

கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட செய்ய வேண்டியவைகள்:
 • டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை நீக்கிவிட வேண்டும்.
 • இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp%  என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். (இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்.)
 • சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive - (C) ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும். 
 • ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ்(Refresh)  செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும். 
 • Refresh செய்திட டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (Shortcut => Windows Button + D ) இப்பொழுது F5 விசை அழுத்தினால் கம்ப்யூட்டர் ரெஃப்ரஸ் ஆகும்.)
 • டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை (Wallpaper) வைத்தாலும் சிறிது வேகம் குறையும். 
 • தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள். 
 • மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும். 
 • Recycle bin - ல் இருக்கும் கோப்புகளை அதிலிருந்து நீக்கிவிட வேண்டும். 
கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவும் மென்பொருட்கள்:

Advanced System Care Pro, PC Tuneup, CCleaner போன்ற PC Tuneup மென்பொருட்கள் ஒரே கிளிக்கில் கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவுகின்றன.

Advanced System Care Pro

கம்ப்யூட்டர் 100% சரியாக செயல்பட இந்த மென்பொருள் நிச்சயம் பயன்படும். ஏனென்றால் இதிலுள்ள வசதிகள் அப்படி.PC Tuneup Software

speedup computer tamil tips

தற்பொழுது இந்த வேலைகளை மிக எளிதாக்குகிறது PC Tuner, CCleaner, Tuneup Utitlites போன்ற மென்பொருட்கள். 

இவைகள் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, புதிய கம்ப்யூட்டர் போல வேகமாக செயல்பட உதவுகின்றன. இவற்றில் PC Tuneup Utilities சிறப்பாக செயல்படுகிறது. AVG ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் புரோகிராம் இது. 


Tags: computer slow, computer speed, RAM, Hard disk, Computer, Solution, Speedup Computer.

Post a Comment

2 Comments

 1. பயனுள்ள தகவல்கள் நன்றி...

  ReplyDelete
 2. பல பகிர்வுகளில் கருத்துரைப் பெட்டி மூடியே இருந்தது... (?) கருத்துரை இட வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி...!

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.