மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி !

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் டேப்ளட் பிசி ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் - சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Funbook P280 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்ளட் பி.சி.யில் 7 அங்குல திரை , ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் இயங்குதளம், 512 ராம் உடன் இணைந்த 1GHz சிங்கிள்கோர் பிராசசர் ஆகியன இடம்பெற்றுள்ளது.

இதில் 4ஜிபி internal memory, 32ஜிபி வரைக்கும் சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் 0.3 மெகா பிக்சல் VGA Camera வும் உண்டு. அத்துடன் யூ.எஸ்.பி. டோங்கல் வழியாக 3G இணைப்பைப் பயன்படுத்தும் வசதி மற்றும் WiFi வசதியும் உண்டு.

micromax-funbook-p280-budget-tablet
டேப்ளட் முழுமையாக இயங்குவதற்குத் தேவையான மின்சக்தியை அளிப்பதற்கு 2400 mAh பேட்டரி உண்டு. இந்த பேட்டரியின் Standby time 250 மணி நேரமாகும்.

Micromax Funbook P280 டேப்ளட்டில் முதன்மை அப்ளிகேஷன்களான  M!Live, Opera Mini, Kingsoft Office உடன் மற்ற அப்ளிகேஷன்களும் இணைந்தே கிடைக்கின்றன.

Micromax Funbook P280 Main Specifications:

 • Android 4.2 Jelly Bean Operating System
 • 7-inch capacitive display with 800x480p resolution
 • 1 GHz Cortex-A8 processor
 • 512 MB RAM
 • 4 GB internal memory, External up to 32 GB
 • 0.3 MP front VGA camera
 • 3G via USB dongle, Wi-Fi
 • 2400 mAh battery

இதன் விலை ரூபாய் 4575/-. பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களாக பிலிப்கார்ட், சினாப்டீல் தளங்களில்  கிடைக்கிறது.  விலை மற்றும் விபரங்களைத் தெரிந்துகொள்ள..

Snapdeal - Flipkart

Post a Comment

1 Comments

 1. micromax funbook விலை 4500 தான் ஜீ

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.