பி.டி.எப் [PDF] என்றால் என்ன?
பி.டி.எப். என்பது ஒரு டாகுமெண்ட். வேர்ட் டாகுமெண்ட் போலதான். ஆனால் அதை பிறர் எடிட் செய்யவோ மாற்றவோ முடியாது. முக்கியமான கோப்புகளை pdf பைலாக மாற்றி அனுப்பிடும்போது உள்ளது உள்ளது போலவே அந்த கோப்பு அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் Portable Document File என அழைப்பர்.
PDF ஃபைல்களை திறந்து பார்த்து படித்திட மென்பொருள்
PDF கோப்புகளைத் திறந்து பார்த்திட வேண்டுமானால், அதற்கென உருவாக்கப்பட்ட PDF Reader களைப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கோப்புகள் முழுமையாகத் திறந்து பார்த்து, படித்திட முடியும். தற்பொழுது கூகிள் குரோம் பிரசௌர் கூட PDF கோப்புகளைத் திறந்து பார்த்திடும் வசதியை கொண்டு வந்துவிட்டது. எனவே பி.டி.எப் ரீடர் மென்பொருள் இல்லாமலேயே கூகிள் குரோம் பிரௌசர் வழியாக பிடிஎப் டாகுமெண்ட்களை ஓப்பன் செய்து படித்திடலாம்.
பி.டி.எப். கிரியேட்டர் மென்பொருள்
PDF File களை உருவாக்கிட சில மென்பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை உருவாக்கிட முடியும். ஒரு பிடிஎப் கோப்பினை எடிட் செய்திட கூட தற்பொழுது வழிகள் உண்டு. அதற்கு PDF எடிட்டர் என்று பெயர். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு கோப்பினை அதன் வழியாகத் திறந்து, வேண்டிய இடங்களில் திருத்தம் செய்து, அந்த கோப்பினை நமக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்து, சேமித்துப் பயன்படுத்தலாம்.PDF CREATOR, VIEWER, EDITOR
PDF ஃபைல்களை திறக்க, எடிட் செய்ய, உருவாக்க என தனித்தனியான மென்பொருட்களைப் பயன்படுத்தாமல், இம் மூன்று செயல்களையும் ஒரே மென்பொருள் வழியாகச் செய்திடும் வசதி கொண்ட மென்பொருட்கள் தற்பொழுது கிடைக்கின்றன. உதாரணமாக SODA PDF CREATOR குறிப்பிடலாம்.பிடிஎப் கிரியேட் செய்ய உதவும் சாதனங்கள்
முன்பு அதிகளவு கணினி மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அதனால் கம்ப்யூட்டர் இருந்தால் மட்டுமே PDF கோப்புகள் உருவாக்க முடியும். அதை படிக்க முடியும். அதை திருத்த முடியும். தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியில் கையடக்க தொலைபேசி முதல் பலவிதமான கணினி சார்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டன. உதாரணமாக ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப் போன்றவற்றை குறிப்பிடலாம். அவற்றின் வழியாகவும் PDF FILE CREATION செய்ய முடியும்.
டேப்ளட் பிசியில் PDF கோப்பு உருவாக்கிட
டேப்ளட் எனப்படும் மினி பிசியில் பிடிஎப் கோப்புளை உருவாக்க முடியும். எடிட் செய்ய முடியும். பார்க்க முடியும்.
அதற்கு உதவும் மென்பொருள் REVU PDF CREATOR.
டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு PDF viwer, PDF creator மற்றும் Editing Tool இது.
உயர்ந்த திறன்கொண்ட விண்டோஸ் 8 டேப்ளட் சாதனங்களிலும் இந்த மென்பொருள் செயல்படும்.
டேப்ளட் பயனர்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள் மூலம் பி.டி.எப் கோப்புகளை எளிதாக பார்க்கலாம், அதிலேயே சிறு குறிப்புகளை எழுதலாம்.
ரேவூ மற்றும் விண்டோஸ் டேப்ளட்டில் அப்ளிகேஷன்களுக்கிடையே காப்பி, பேஸ்ட் செயல்களை மேற்கொள்ளுவதன் மூலம் பக்கங்களை இடைச்செருகல் செய்திடலாம்.
Markup மற்றும் PDF Editing வேலைகளைச் செய்திடலாம்.
இதில் இடம்பெற்றிருக்கும் மற்ற சிறப்பம்சங்கள்:
- Markup
- Navigation
- Lasso
- Profiles
- Full Screen Mode
- Edit Pages
- Insert Page
- Free Text
- Pressure Sensitivity
- Appearance, Style, Font
- Tool Chest
- Rotate
- Reuse
ரேவூ (Revu) மென்பொருளைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளவும், தரவிறக்கம் செய்யவும் சுட்டி:
Download Revu PDF Creator , Editor
PDF CREATOR FOR ANDROID PHONE - ஆன்ட்ராய்டு போனில் பி.டி.எப் ஃபைல் உருவாக்கிட
இன்று பெரும்பாலும் ஆன்ட்ராய்ட்டு போன் வெட்டி அரட்டை அடித்திடவும், யூடீயூப் போன்ற வீடியோ தளங்களில் சினிமா, நாடகம், பாட்டு பார்த்திடவும், ஃபேஸ்புக், வாட்சப் என சமூக வலைத்தளங்களை பார்வையிடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதிலிருந்து அலுவலகங்களுக்குத் தேவையான கோப்புகள் உருவாக்கிட முடியும் என்பது மிகப் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது. அல்லது அது மிக கடினம் என நினைத்து அந்த பயன்பாடுகளை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். ஆனால் அது மிக சுலபம் தான்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் போனில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு செயல்பாடுகளைச் செய்திட அற்புதமான PDF APP FOR ANDROID PHONE செயலிகள் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்தி மிக எளிதாக மேற்கண்ட செயல்பாடுகளைச் செய்திடலாம்.
உதரணமாக PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் PDF Clip and Scrap ஐ குறிப்பிடலாம். இதனை சுருக்கமாக CUP app என வழங்குகின்றனர். இந்தச் செயலியினை தரவிறக்கம் (download) செய்திட சுட்டி.
Download PDF Clip and Scrap Android App
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் போனில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு செயல்பாடுகளைச் செய்திட அற்புதமான PDF APP FOR ANDROID PHONE செயலிகள் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்தி மிக எளிதாக மேற்கண்ட செயல்பாடுகளைச் செய்திடலாம்.
உதரணமாக PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் PDF Clip and Scrap ஐ குறிப்பிடலாம். இதனை சுருக்கமாக CUP app என வழங்குகின்றனர். இந்தச் செயலியினை தரவிறக்கம் (download) செய்திட சுட்டி.
Download PDF Clip and Scrap Android App
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.