கம்ப்யூட்டர் கீபோர்ட் டெக்னாலஜி !

கணினி புது நுட்பம்

கம்ப்யூட்டரில் தரவுகள் உள்ளீடு செய்வதற்கு மிக அவசியம் கீபோர்ட். வழக்கமான கீபோர்டில் அல்ப்பெட்டிக் (Alphabet) மற்றும் நியூமரிக் (Numeric) விசைகள் மற்றும் முக்கியமான குறியீடுகள் இருந்தன.

தொழில்நுட்பம் வளர வளர கீபோர்டில் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. 

அவ்வாறு வெளிவந்துள்ள பல விதமான கீபோர்ட்கள் (Keyboards) மற்றும் அதில் உள்ள  சிறப்பு வசதிகள் என்னென்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

நீரில் நனைந்தாலும் பயன்படும் கீபோர்ட், பேப்பரைப் போல சுருட்டி கையோடு எடுத்துச்செல்லும் வகையிலமைந்த கீபோர்ட் (Smart Key Board) என பலவகை கீபோர்ட்கள் வெளிந்துள்ளது.

தற்பொழுது வந்துள்ள தொடுதிரை தொழில்நுட்பத்தின் பயனாக, திரையில் உள்ள எழுத்துக்களை தொடுவதன் மூலம் உள்ளீடுகளை (input) கொடுக்க முடியும். இந்த வசதியின் மூலம் மிக விரைவாக தட்டச்சிடுவது சாத்தியமாகியுள்ளது. 

new input technology

இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக வெற்றிடத்தில் கை விரல்களை அசைப்பதன் மூலம் திரையில் தேவையான இன்புட் கொடுக்க முடியும்.
DexType என்ற இப்புதிய தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டு வரும். 

இதன் மூலம் கணினிப் பயன்பாடுகளைத் திறக்கலாம்...(Open Programs). அதில் பணிபுரியலாம். கீபோர்ட் மற்றும் மௌஸ் மூலம் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து முடிக்கலாம். 

செய்ய வேண்டிய ஒன்றுமட்டுமே..  காற்றில் விரல்களை அசைத்தால் போதும்...கணினியில் உள்ள பயன்பாடுகளை எளிதில் திறக்கச் செய்யவும், தட்டச்சிடவும் முடியும்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்துச்செயல்களையும் விரல்களிலேயே செய்து முடித்துவிடுவதால், கீபோர்ட் மற்றும் மௌஸ் தேவை இருக்காது.

இதைப் பற்றி தெளிவாக இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது. 
இனி எதிர்காலத்தில் கீபோர்ட் மற்றும் மௌசின் தேவை குறைந்து, விரைவிலேயே அவைகள் பயன்படுத்துவது குறைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 
சுப்புடு
Tags: touch screen, keyboard, air keyboard, DexType technology, DexType method, DexType in the air, keyboard, computer keyboard

Post a Comment

0 Comments