பென்டிரைவ் மூலம் கம்ப்யூட்டரை லாக் செய்ய

உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போல, உங்களுடைய கம்ப்யூட்டரைப் பூட்டவும் (Computer Lock) சாவி இருந்தால் நன்றாக இருக்கமல்லவா? 

உங்களுடைய கம்ப்யூட்டரை பென்டிரைவ் பூட்டிப் பாதுகாக்க முடியும். ஒரு முறை பூட்டிவிட்டால் பிறகு அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது. 

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். 

பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? 

pendrive-as-key-for-computer

முடியும் நண்பர்களே..!

இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் Predator. முற்றிலும் இலவசமான புரோகிராம் இது .

இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடைய ஃப்ளாஸ் டிரைவ்வை  எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். 
2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும். 
3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.
4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும். 
5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)
6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும். 
7. இறுதியாக கிரியேட் கீ - Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும். 

அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள்.

Also Read: Top 10 Computer Tips in Tamil 

இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும்.

பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள். 

30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும்.

இணைக்கப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும். 

இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும். 

நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்

இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி. வேறு யாரிடமும் அதை பயன்படுத்த கொடுக்க கூடாது. 

ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை தொடங்கவிட்டு, பிறகு இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் (Alternate Port for Pen-drive)கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.

இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied ) என்றுதான் காட்டும்.

முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...!

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Download Predator என Google Search -ல் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். 

நன்றி. 


Tags: free pregator program, usb drive, usb drive as key for computer, computer protector program, computer safety key usb flash drive, protecting method using USB, USB ports, monitoring program for personal computer, task bar, green light, usb port key, pen-drive as a computer key for log on computer,  windows, security, hardware and software.

Post a Comment

2 Comments

  1. அலுவலகத்தில் தேவைப்படுகிறது.... பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. ஓஸ் மாற்றினால் ?????????????

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.