கீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் !

நோக்கியா. இந்த வார்த்தையே உலக மக்களிடம் மிக பிரபலமானது. 
செல்போனைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டு வந்த காலம் முதல் இப்பொழுது வரை நோக்கியாவின் தயாரிப்புகள் என்றுமே சோடை போனதில்லை.

ஆனால் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க சற்றுத் திணறிதான் போனது நோக்கியா. சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் போட்டியில் பின்னடவை சந்தித்துது நோக்கியா.

நோக்கியாவை மீண்டும் முன்னேற்றவும், தன்னுடைய விண்டோஸ் 8 இயங்குதளத்தை நோக்கியா தயாரிப்புகளில் புகுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதை வாங்கிக்கொண்டது.

New Nokia 1320 Tablet PC with Gorilla Glass touch screen

அதன் பிறகு நோக்கியா நிறுவனம் தற்பொழுது மீண்டும் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள நோக்கியா லூமியா டேப்ளட் சாதனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நோக்கியா நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த Nokia 2025 tablet pc விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. 

New Nokia 1320 Tablet PC

அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசியை வெளியிட்டுள்ளது நோக்கியா. Nokia 1320 Tablet PC என்ற பெயருடைய இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

இதில் ஸ்கிரீனில் கீரல் விழாமல் இருப்பதற்கான கொரில்லா கிளாஸ் (Gorilla Glass Technology), டேப்ளட் பிசியை அற்புதமாக, விரைவாக செயல்படுத்தக்கூடிய திறன்மிக்க 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor, 1ஜிபி ரேம், படங்கள் மற்றும் வீடியோக்கள் துல்லியமான தரத்துடன் எடுக்க 5 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது.

8GB உள்ளக நினைவகம், 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டில் சேமிக்கும் வசதி, ஆகியனவும் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த டேப்ளட்டுடன் 7GB கொள்ளவிற்கு தகவல்களை Cloud Storage வசதியின் மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

Microsoft நிறுவனத்தின் MS-Office ஐயும் இந்த டேப்ளட்டில் பயன்படுத்த முடியும். இதில் word, Excel, Powerpoint போன்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன்படுத்தும் வசதி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கிய பிறகு வெளியிடப்படும் முதல் டேப்ளட் பிசி இதுவாகும்.

இதன் விலை ரூபாய் 20,900. 2014 புத்தாண்டில் இந்த டேப்ளட் பிசி விற்பனைக்கு கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

நோக்கியா லூமியா டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

Nokia Lumia 1320 Tablet Pc Specifications:

 • Windows Phone 8 Operating System
 • 6-inch HD LCD IPS Super sensitive display and Gorilla Glass 3 protection (1280 x 720 pixels) 
 • 1.7 GHz dual-core Qualcomm Snapdragon 400 processor
 • 5MP Auto Focus camera with LED flash
 • 1080p HD recording at 30 fps
 • VGA front-facing camera
 • 1GB RAM
 • 8GB internal memory
 • micro SD card support up to 64GB
 • 3.5mm audio jack 
 • FM Radio
 • HD Voice,HAAC mic
 • 4G LTE/ 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0 + LE, GPS / aGPS, NFC
 • Dimensions - 164.25 x 85.9 x 9.79 mm  Weight - 220 grams
 • 3400 mAh (integrated) Battery

Tags: Nokia Lumia 1320, Nokia Lumai 2025, Nokia Lumia new tablet pc, Nokia Lumia 1320 windows 8 tablet pc, Nokia Lumia tablet pc with 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor, Nokia Lumia 1320 tablet pc with Cloud Storage, Nokia Lumia 1320 tablet pc with 5 MP camera, Nokia Lumia 1320 tablet pc with 32GB micro SDcard, Nokia Lumia 1320 tablet pc with Gorilla Glass touch Screen, Nokia Lumia 1320 tablet pc with 8GB internal memory, Nokia Lumia 1320 tablet pc with 1GB RAM.

Post a comment

0 Comments