டூப்ளிகேட் கோப்புகளை நீக்கிட CCleaner மென்பொருள்

கம்ப்யூட்டரில் உள்ள தேவையில்லாத குக்கீஸ்கள், பிரௌசர் குக்கீகள், டெம்ப்ரரி பைல்கள், தேவையற்ற மென்பொருள்கள், ஆகியவற்றை நீக்கப் பயன்பட்ட சி கிளீனர் மென்பொருளில் தற்பொழுது கம்ப்யூட்டரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டு உள்ள ஒரே மாதிரியான பைல்களை (Duplicate Files) நீக்கும் வசதியும் வந்துவிட்டது.


duplicate file finder

டூப்ளிகேட் பைல்களை ஏன் நீக்க வேண்டும்?

டூப்ளிகேட் ஃபைல்கள் கம்ப்யூட்டரில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மற்ற ஃபைல்களை சேமித்து வைக்க போதுமான இடம் ஹார்ட் டிஸ்க் -ல் கிடைக்கும்.

ஆயிரக்கணக்கான கோப்புகள் உள்ள கம்ப்யூட்டரில் டூப்ளிகேட் ஃபைல்களை தேடி அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவேதான் "Duplicate File Finder" டூல் நமக்குத் தேவைப்படுகிறது.

சிகீளினர் புதிய பதிப்பில் இந்த வசதி இருப்பதால் மிக எளிதாக டூப்ளிகேட் ஃபைல்களை கண்டுபிடித்து நீக்கிவிடலாம்.

சி கிளீனரில் டூப்ளிகேட் பைல்களை நீக்கும் முறை:

முதலில் சிகிளீனர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து திறக்கவும்.

செய்முறை: 

1. சீ கிளீனர் மென்பொருளில் Tools டேபினைக் கிளிக் செய்யவும்.
2. File Finder என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3. அதில் Ignore என்பதில்  Modified Date under Match By, File Size Under என்ற இரண்டிலும் டிக் மார்க் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
4. அடுத்து சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்சனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
5. அடுத்து Browse என்பதில் கிளிக் செய்து டூப்ளிகேட் பைல் கண்டறியப்பட வேண்டிய கோப்புறையை தேர்ந்தெடுக்கவும்.
6. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட போல்டரில் டூப்ளிகேட் கோப்புகள் இருப்பின் அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான, ஒரே மாதிரியான கோப்புகளை வரிசைப்படுத்திக் காட்டயதிலிருந்து தேவையில்லாத டூப்ளிகேட் கோப்புகளை தேர்ந்தெடுத்து நீக்கிவிடலாம்.

சி-கிளீனர் மென்பொருளின் புதிய பதிப்பு டவுன்லோட் சுட்டி:

Features and Free Download Link of Duplicate File Finder and Remover Software C-Cleaner [New Version]

Tags: c cleaner, computer tips, duplicate file, duplicate file removing, Duplicate file finder.
Search Description: Features and Free Download Link of Duplicate File Finder and Remover Software C-Cleaner .

Post a comment

0 Comments