ஆண்ட்ராய்ட் டேப்ளட்டில் Guest Account உருவாக்குவது எப்படி?

டேப்ளட் பிசி என்பது இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேப்ளட் பி.சி.கள் பிரபலமானதற்கு காரணம் அதனுடைய அமைப்பு மற்றும் அளவு. டேப்ளட் பி.சி மூலம் இன்டர்நெட் மற்றும் இமெயில் போன்ற முக்கியமான வசதிகளுடன் கேம்ஸ், வீடியோ போன்ற மேலதிக வசதிகளை பெறமுடியும் என்பதாலும்தான். 

நவீன கால ஆன்ட்ராய்ட் டேப்ளட்கள் Android 4.2 அல்லது அதற்கு பின் வந்த புதிய ஆன்ட்ராய்ட் பதிப்புளைப் பயன்படுத்தும் டேப்ளட்கள் நமக்கு மல்டிபிள் யூசர் அக்கவுண்ட்களை (Multiple User Account) கிரியேட் செய்து பயன்படுத்த அனுமதிக்கிறது. 

அதாவது விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Guest Account கிரியேட் செய்வதைப் போலவே டேப்ளட் பிசி யிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் கிரியேட் செய்யும் வசதிகளைக் கொடுக்கிறது.
tablet pc, restricted profile, guest account in tablet pc, android tablet pc

டேப்ளட் பிசியில் Guest Account கிரியேட் செய்வது எப்படி? 


ஆன்ட்ராய்ட் டேப்ளட் பிசியில் ஒரு கெஸ்ட் யூசர் அக்கவுண்ட் உருவாக்க ஆன்ட்ராய்ட் 4.2 (Android 4.2 OS)அல்லது அதற்கு பின் வெளியான புதிய ஆன்ட்ராய்ட் ஓ.எஸ் கட்டாயம் இருக்க வேண்டும். கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்க...

முதலில் செட்டிங்ஸ் திரையைக் கொண்டு வாருங்கள். 

share-your-android-tablet-pc-and-keep-your-privacy-with-a-guest-account

அதில் உள்ள Wif-Fi, Bluetooth, Data Usage என்ற வரிசையில் Device என்ற பகுதியில் கீழாக உள்ள  "Users" என்பதை டேப் செய்யுங்கள்.
Users என்பதற்கு கீழாக Add User O Profile என்ற ஒரு ஆப்சன் இருக்கும். 
அதில் டேப் செய்யுங்கள். 


அதில் Add என்பதின் கீழாக User மற்றும் Restricted Profile என இரண்டு வசதிகள் இருக்கும். ரெஸ்டிக்டட் புரொபைல் என்பதை பிறகு  பார்க்கலாம். 

முதலில் இருக்கும் அதில் User என்பதை என்பதை தொடுங்கள் (tap) செய்யுங்கள்.

அதைத் தொடர்ந்து "Add New User" என்ற தலைப்பின் கீழ் புதிய யூசர் அக்கவுண்ட் கிரியேட் செய்வதைப் பற்றிய விளக்கம் காண்பிக்கப்படும். 

share-your-android-tablet-pc-and-keep-your-privacy-with-a-guest-account-3

You can share this device with other people by creating additional users. Each user has their own space, which they can customize with their own apps, wallpaper, and so on. Users can also adjust tablet settings lke wi-fi that affect everyone. 

After you create a new user, that person needs to go through a setup process. 

Any user can accept updated app permissions on behalf of all other users. என்ற தகவலைக் காட்டும். அதில் OK என்பதைத் தொடுங்கள். 

அடுத்து தோன்று Set up user now என்பதில் "set up now" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்பொழுது உங்களுக்கு லாக் ஸ்கிரீன் தோன்றியிருக்கும்.  அதாவது நீங்கள் புதிய பயனராக ஆகிவிட்டீர்கள். லாக் ஸ்கிரீனை அன்லாக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு வெல்கம் ஸ்கிரீன் தோன்றும். அதில் got google? என்ற தலைப்பில் Do you have a google account? எனக்கேட்டு கீழே Yes or NO என்ற வாய்ப்புகள் இருக்கும். 


அதில் "NO" என்பதைத் தொடுங்கள். 

share-your-android-tablet-pc-and-keep-your-privacy-with-a-guest-account-7


யெஸ் என்பதைத் தேர்ந்தெடுத்தால் "கெஸ்ட் அக்கவுண்டும்" நார்மல் அக்கவுண்ட்போல செயல்படலாம். அதாவது கூகிள் அப்ளிகேஷனை அவர்களும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். நோ கொடுத்துவிட்டால் டேப்ளட் பிசியில் அடிப்படையில் உள்ள இயல்பு நிலை அப்ளிகேஷன்களை (Google Chrome Browser, Google Maps, YouTube and more) மட்டும் பயன்படுத்த முடியும். எனவே நோ கொடுத்துவிடுங்கள். இதனால் டேப்ளட் பிசியில் அதிகளவு அப்ளிகேஷன்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடிவதோடு கூகிள் பிளே ஸ்டோர் மூலம் புதிய அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்வதையும் தடுக்க முடியும். 

தொடர்ந்து வரும் பக்கத்தில் "Your Name" என்ற பகுதியில் GUEST என்பதற்கு பதிலாக உங்களுடைய கெஸ்ட் பெயரை கொடுக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம்.

share-your-android-tablet-pc-and-keep-your-privacy-with-a-guest-account-8


ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு செல்ல "லாக் ஸ்கிரீனுக்கு" அடியில் உள்ள ஐகான்களை தொடுவதன் மூலம் திறந்துகொள்ளலாம். 

மேலும் உங்களுடையே டேப்ளட்டில் வலது மேல் மூலையில் இருக்கும் quick settings panel இழுத்தும் உங்களுடைய யூசர்நேமை டேப் செய்து ஒரு யூசரிலிருந்து மற்றுமொரு யூசர் அக்கவுண்டிற்கு மாறிக்கொள்ளலாம். 


குறிப்பிட்ட நபர்கள் அவர்கள் மட்டும் தங்களுடைய அக்கவுண்ட்டை பாதுகாப்புடன் வைத்து செயல்பட நீங்கள் நினைத்தீர்களேயானால், வழக்கம்போல கெஸ்ட் யூசர் அக்கவுண்ட் கிரியேட் செய்யும் வழிமுறைகளை அவர்களுடைய கூகிள் அக்கவுண்ட் மூலம் செய்துகொள்ள கொடுக்கலாம். அதாவது கெஸ்ட் அக்கவுண்ட் கிரியேட் செய்யும்பொழுது அவர்களிடம் கொடுத்து அவர்களுடைய கூகிள் அக்கவுண்ட் மூலம் டேப்ளட்டில் உள்நுழையுமாறு அமைத்திடலாம். 

ரெஸ்ரிக்டட் புரொபைல்: 

நீங்கள் 4.3 ஆன்ட்ராய்ட் வர்சன் பயன்படுத்தினீர்கள் என்றால் இந்த வசதியை மேற்கொள்ள முடியும். 

இந்த ரெஸ்ட்ரிக்ட்டஃ புரொபைல் வசதி ஒரு சிறந்த வசதியாகும். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் அல்லது சிறுவர்கள் குறிஃப்பிட்ட அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்துமாறு செய்துவிடலாம். தேவையில்லாத கேம்ஸ் போன்ற அப்ளிகேஷன்களை ரெஸ்ட்ரிக் செய்துவிடலாம். 

share-your-android-tablet-pc-and-keep-your-privacy-with-a-guest-account-8


இது ஒரு பேரண்டல் கன்ட்ரோல் போன்றது. உங்களுடைய அக்கவுண்டில் நீங்கள் இருக்கும்போதே இந்த ரெஸ்ட்ரிக்டட் புரொபைல் அக்கவுண்ட்டை திறந்து குழந்தைகளிடம் கொடுக்கலாம். நீங்கள் அனுமதித்த அப்ளிகேஷன்களைத் தவிர மற்றதை அவர்களால் அணுக முடியாது. அதே போல எந்த ஒரு அப்ளிகேஷனையும் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் வாங்கவும் முடியாது. 

tablet pc, restricted profile, guest account in tablet pc, android tablet pc, android 4.3 tablet pc, android 4.2 jelly bean tablet pc, create restricted profile in android 4.2 tablet pc, keep your privacy through creating guest user. 

Post a Comment

2 Comments

  1. தகவலுக்கு நன்றி!(தமிழ்மொழி.வலை) http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி!

    (தமிழ்மொழி.வலை)
    http://www.thamizhmozhi.net

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.