செல்போன் விற்பதற்கு முடிவு செய்துவிட்டால், உடனடியாக அதில் சில விஷயங்களை கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள மெசேஜ்கள், படங்கள், முக்கியமான டேட்டாக்கள் என அனைத்தையும் பிறர் பயன்படுத்திட வாய்ப்புகள் உருவாகும்.
செல்போன் மெமரி அழித்தல்:
நண்பர்களுக்கு விற்பதாயினும், அல்லது கடைகளில் எக்சேன்ஜ் செய்து வேறு மொபைல் வாங்குவதாயினும் முதலில் செல்போன் மெமரியை முற்றாக நீக்க வேண்டும்.
செல்போன் மெமரி அழித்தல்:
நண்பர்களுக்கு விற்பதாயினும், அல்லது கடைகளில் எக்சேன்ஜ் செய்து வேறு மொபைல் வாங்குவதாயினும் முதலில் செல்போன் மெமரியை முற்றாக நீக்க வேண்டும்.
மெமரி கார்டு நீக்கி எடுத்தல்
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள மெமரி கார்ட்டை எடுத்துவிடுங்கள். காரணம் அதில் உங்களுடைய தனிப்பட்ட படங்கள் உட்பட முக்கியமான தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கலாம்.
சிம்கார்டு நீக்கி எடுத்தல்
அடுத்து நீங்கள பயன்படுத்தும் சிம்கார்டை மறக்காமல் எடுத்துவிடுங்கள். இதன்மூலம் உங்களது காண்டாக்ட்டில் இருக்கும் முக்கியமான நபர்களின் செல்போன்கள் எண்களை நீங்களே பாதுகாக்க முடியும். மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம்.
SMS அழித்தல்
SMS அழித்தல்
அடுத்து உங்களுடைய போனில் உள்ள Text message, voice message, picture message போன்ற அனைத்து வகையான SMS களையும் அழிக்க வேண்டும்.
இதற்கு அந்த போனிலேயே ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள். எனவே அதில் உள்ள inbox, outbox, draft, sent items போன்ற அனைத்து போல்டர்களிலும் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடுங்கள்.
போன் மெமரி டெலீசன்
இதற்கு அந்த போனிலேயே ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள். எனவே அதில் உள்ள inbox, outbox, draft, sent items போன்ற அனைத்து போல்டர்களிலும் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடுங்கள்.
போன் மெமரி டெலீசன்
அதற்கடுத்தாற்போல் நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்தே ஆகவேண்டும். போன் மெமரியில் உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்க வேண்டும். (Delete Phone memory)
போன் மெமரியை அழிப்பதற்கான வழிமுறைகள்:
iPhone ல் போன் மெமரி அழித்தல்.
- Settings Menu செல்லுங்கள்.
- General என்பதைத்தொடுங்கள்..
- Reset செய்திடுங்ள்....
Black Berry ல் போன் மெமரி அழித்தல்.
- உங்கள் பிளாக்பெர்ரி போனின் முகப்புத் திரையிலிருந்து Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Security Options என்பதை தெரிவு செய்யவும். (இது balckberry 6.0, 7.0 மட்டும் )
- Security Wipe என்பதை தெரிவு செய்யவும். (இது balckberry 4.5, 4.6. 4.7 மட்டும் )
- அப்பொழுது கேட்கும் பாஸ்வேர்ட்டுக்கு blackberry என்ற சிறிய எழுத்துகளில் தட்டச்சிடுங்கள்..
- அடுத்து wipe என்பதைத் தொடுங்கள். அல்லது என்டர் கொடுங்கள்.
- அடுத்து உங்கள் போனில் கெப்பாசிட்டிக்கு தகுந்தாற்போன்ற சில நிமிடங்களில் உங்களுடைய அனைத்து டேட்டாக்களும் அழிந்துவிடும்.
Windows Mobile ல் போன் மெமரி அழித்தல்.
- Start தொடுங்கள்
- Settings தொடுங்கள்..
- clear storage தொடுங்கள்..
- 1234 என பாஸ்வேர்ட் கொடுங்கள்...
- உறுதிப்படுத்த yes தொடுங்கள்..
- சில நிமிடங்களில் உங்களுடைய அனைத்து தகவல்களும் அழிந்துவிடும்.
- உங்கள் போனில் dial pad அல்லது keypad ல்...
- #7370# என உள்ளிடுங்கள்..
- Security password -ல் 12345 கொடுங்கள்...
- உங்களுடைய நோக்கியா போனில் தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.
(General methods of Reset mobile memory)
- உங்களுடைய செல்போன் செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்..
- அதில் Data wipe, Memory, Clear, Master Reset போன்ற ஏதேனும் ஒரு மெனு இருக்கும்.
- அதில் தொடருங்கள்....
- பாஸ்வேர்ட் கேட்டதெனில் பொதுவாக 1234, 12345, அல்லது 00000 என்பவையே இருக்கும்.
- அதைப் பயன்படுத்தி தேவையான செல்பேசியில் உள்ள தகவல்களை நீக்கிவிடலாம்.
மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தியும் தகவல்களை அழிக்க முடியவில்லை எனில் உங்கள் மொபைல் கம்பெனியின் கஷ்டமர்கேர்க்கு (custom care) போன் செய்து மொபைலை ரீசெட் (how to reset mobile memory) செய்வது எப்படி என்பதை அறிந்துகொண்டு, அதன்படி செய்யலாம்.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.