மொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் !

ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது ட்ரிக் (Mobile Number Hiding Trick) உள்ளது.

mobile number theriyamal maraikka


நண்பர்களிடம் விளையாட நீங்கள் இந்த ட்ரிகை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.

மொபைல் எண்ணை மறைத்து பேச...

உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். மற்றபடி பிளாக் மெயில் செய்வதோ, மிரட்டுவதோ... வேறு பல சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ செய்யலாம் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயில் கம்பியை எண்ண வேண்டியதுதான்.

Update: இந்த வசதி பெரும்பாலான மொபைல் போன்களில் தற்பொழுது வேலை செய்வதில்லை. 

Update: தற்பொழுது கூகிள் ப்ளே ஸ்டோரில் மொபைல் நம்பரை பிறர் அறியாமல் தடுப்பதற்கென புதிய ஆன்ட்ராய்ட் ஆப்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான ஆப்கள் சரியாக தொழில்படவில்லை என அதைப் பற்றிய கருத்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலவசமாக கிடைக்கும் இந்த செயலிகளில் ஒரு சில 90% வெற்றிகரமாக செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பதிவு இது.

பரிந்துரைக்கப்படும் பதிவு: போன் நம்பரை மறைத்திட ஆன்ட்ராய்ட் ஆப் 

Post a Comment

4 Comments

  1. Yes I also try but not working. Anyway thanks

    ReplyDelete
  2. Replies
    1. இந்த வசதி தற்பொழுது செயல்படவில்லை..!

      Delete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.