ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் என்றால் என்ன?


முதலில்  ஆண்ட்ராய்ட் விட்ஜெட் (Android Widget) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் முகப்பு பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமிற்கான  ஐகானும் விட்ஜெட் என்றழைக்கப்படுகிறது.

உதாரணமாக வீடியோ பிளேயர்(Video Player), காலண்டர் போன்றவற்றைக் கூறலாம். இந்த விட்ஜெட்கள் சிலவற்றை நீங்களாகவே தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் போனிலேயே இணைந்து சில விட்ஜெட்கள் இருக்கும்.


ஒவ்வொரு விட்ஜெட்டும் புதிய அப்டேட்களை தானாகவே செய்துகொள்ளும்.


ஆண்ட்ராய்ட் போனில் இடம்பெற்றுள்ள அனைத்து விட்ஜெட்களையும் பார்க்க(see all widgets in android phone)

  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் Home Page செல்லுங்கள்.
  • அங்குள்ள application list ஐகானை தட்டுங்கள்
  • இப்போது உங்களுக்கு விட்ஜெட் ஐகான்கள் தோன்றும்.
  • திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஐகான்களை வலது அல்லது இடது புறம் ஸ்வைப் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

விட்ஜெட் ஒன்றினை Home Screen க்கு கொண்டுவர என்ன செய்வது?


  • ஹோம் ஸ்கிரீனுக்கு கொண்டு வர வேண்டிய விட்ஜெட்டின் மீது அழுத்திக்கொண்டே இருக்கவும். இப்போது அந்த விட்ஜெட் ஒரு பாப்அவுட் ஆகி தானாகவே உங்களுடைய Home screen க்கு வந்துவிடும்.
  • ஹோம் ஸ்கிரீனீல் விட்ஜெட் அமைக்கப்பட வேண்டிய கட்டம் தோன்றும் அதில் நீங்கள் விருப்பட்ட விட்ஜெட்டினை இழுத்து அந்த கட்டத்தில் அமைத்துக்கொள்ளலாம்.
  • இவ்வாறு நீங்கள் செய்யும்போது ஹோம் ஸ்கிரீனில் அந்த விட்ஜெட் அமைக்க போதுமான இடம் இல்லையெனில் ஓர் எச்சரிக்கை செய்தி காட்டும். அப்போது நீங்கள் அடுத்த Home screen க்கு விட்ஜெட்டை கொண்டு செல்லலாம். அல்லது ஏற்கனவே இருக்கிற ஒரு விட்ஜெட்டை ரிமூவ் செய்து அந்த இடத்தில் புதிய விட்ஜெட்டை அமைக்கலாம்.

ஏற்கனவே இருக்கிற ஒரு விட்ஜெட்டை எப்படி நீக்குவது?


  • நீக்க வேண்டிய விட்ஜெட்டின் மீது விரல் வைத்து சிறிது அழுத்திக்கொண்டிருக்க (Press on widget) வேண்டும். 
  • பிறகு அதனை Remove அல்லது எக்ஸ் என்ற திரைக்கு மேலாக உள்ள இடத்திற்கு இழுத்துச்சென்று விட்டுவிட வேண்டும். 
  • இப்போது அந்த விட்ஜெட் நீக்கப்பட்டிருக்கும்.
Hi friends, in this post i explained that what is an android widget?, How to see all widgets in your android Smartphone?, How to move an android widget on android home screen?, how to remove a widget from home screen?.
I hope this post is very useful for Tamil android users. Please leave your valuable comment. Thankyou.

நன்றி. 
-சுப்புடு

Post a comment

1 Comments

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.