சாம்சங் கேலக்சி டியோ மியூசிக் ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள்

Specifications of Samsung Galaxy Duos 6012 musicaa

கடந்த அக்டோபர் மாதம் சாம்சங் எஸ் 6012 கேலக்சி மியூசிக் ஸ்மார்ட் போன்  பற்றி அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.

இப்புதிய ஸ்மார்ட் போன் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஸ்மார்ட்போன் விரும்பிகள் இதனை அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். பல்வேறுபட்ட பயன்மிக்க சிறப்பு வசதிகளை உள்ளடக்கிய இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்சி டியோ எஸ்6012 மியூசிக் - சிறப்பம்சங்கள்

3 அங்குல டி.எப்.டி கெபாசிடிவ் டச் ஸ்கிரீனைக் கொண்ட இந்த போன் இரண்டு சிம்களைப் பயன்படுத்திடும் வகையில் உள்ளது. நான்கு வித அலைவரிசைகளில் இயங்க கூடியது. இதனுடைய பரிமாணம் 11.1x59x12.3 மி.மீ.  107 கிராம் எடை கொண்டது. Bar Type வடிவில் உள்ள இந்த மொபைல் போன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

இதில் உள்ள சிறப்பு வசதிகள்:  3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் கூடிய லவுட் ஸ்பீக்கர், மைக்ரோ எஸ்.டி கார்ட் மூலம்  32 GB வரைக்கும் மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 4GB, RAM 512 நினைவகங்கள் அமையப்பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வை-பை, ஜி.பி.ஆர்.எஸ், எட்ஜ் போன்ற நெட்வொர்க் வசதிகளும், ப்ளூடூத் A2DP இயங்குகிறது. 3.15 மெகா பிச்சல்கொண்ட காமிரா இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். இந்த கேமராவின் மூலம் தரம் வாய்ந்த படங்கள் வீடியோக்களை எடுக்க முடியும். கூடுதலாக இதில் டச் போகஸ், ஜியோ டேங்கிங் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஸ்டீரியோ, உள்ளமைந்த ஆண்டெனா, எப்.எம். ரேடியோ அக்சிலரோமீட்டர், எஸ்.எம்.எஸ், இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டன்ட் மேனேஜர் போன்ற வசதிகளும் உள்ளன.

தொடர்ந்து பதினைந்து மணி நேரம் பேசக்கூடிய திறன் கொண்ட 1300 mAh Battery இதில் உள்ளது. இந்த சக்திமிக்க பேட்டரி தொடர்ந்து 570 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்க வல்லது.

இத்தனை சிறப்பு மிக்க ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 4.0.4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதனுடைய விற்பனை விலை அதிகபட்சமாக ரூபாய் 6.999 ஆகும்.

இந்தியாவில் அனைத்து டீலர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்களிடமும் சாங்சம் கேலக்சி எஸ் 6012 கிடைக்கிறது.

Samsung Galaxy Music Duos S6012 is the Samsung’s one of the good product. It comes with 3.0 inch screen size, 3.15 MP Camera, 4 GB internal capacity, 512 MB Ram, ARM Cortex A9 CPU, 850 MHz processor frequency and 15 hours talk time, 570 hours standby time.

Body Specs: 59 mm Width 110 mm height 12 mm Depth 107 g Weight   Display Specs: 3.0-inch Diagonal size 240x320 Display Size 256 k Display Colors  
Smart Features: HTML 5 Browser Email Messaging Camera Specs: 3.15 MP Camera 2048x1536 Camera Resolutions.
Hardware specs: ARM Cortex a9 Processor 850 MHz Processor frequency Battery Specs: 570Hrs Standby time 15Hrs Talk time
Operating System: Android 4.0.1 Sand-witch

Post a Comment

0 Comments