ஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி?


ஆண்ட்ராய்ட் போனில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. தற்பொழுது ஆண்ட்ராய்ட் போன் மூலம் உடல்நிலையை கண்காணிக்கும் வசதிகளும் வந்துவிட்டன என்பதை கடந்த பதிவொன்றில் பார்த்தோம். 

மிகப் பலராலும் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மூலம் CALL RECORD செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 

Automatic Call Recorder - Android Apps for android smartphone

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் போன்களில் கால் ரெக்கார்டிங் ஆப்சன் இருக்கும். ஆனால் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் அதுபோன்ற வசதிகள் இருப்பதில்லை. கால் ரெக்கார்டிங் செய்வது நமக்கு பல்வேறு வகைகளில் பயன் அளிக்கும். ஒரு சந்தேகம் தொடர்பாக ஒருவரை நாம் அணுகும்போது அவர் அளிக்கும் பதில்களை நாம் அப்படியே மனதில் நிறுத்த வேண்டும். சில சமயங்கள் நீண்ட நேரம் உடையாட வேண்டிய அவசியம் ஏற்படலாம். 


குறிப்பாக சில செயல்முறைகளை அவர்கள் கூறும்போது அவற்றை நாம் வரிசையாக நினைவுப்படுத்தி வைத்துக்கொண்டு செய்வதென்பது சிரமம். இதுபோன்ற சமயங்களில் கால் ரெக்கார்டிங் நமக்கு உதவிகரமாக இருக்கும். 

சரி.. ஆண்ட்ராய்ட் போனில் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 

ஆண்ட்ராய்ட் போனில் கால் ரெக்கார்டிங் செய்யவென சில அப்ளிகேசன் உள்ளன. அவை1. கால் ரெக்கார்டர் (Call Recorder), 2. ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் (Automatice Call Recorder), 3. ஆர்எம்சி அட்வான்ஸ் கால் ரெக்கார்டர் (RMC Advance Call Recorder)

1. ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டர் (Automatice Call Recorder)

Automatic Call Recorder - Android Apps for android smartphone

Automatice Call Recorder அப்ளிகேசன் மூலம் நீங்கள் தொடர்புகொள்ளும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாம். இதில் குறிப்பிட்ட காண்டாக்ட் கால்களை தேவையில்லை எனில் ignore contacts வசதியின் மூலம் எந்தெந்த கான்டாக்ட் அழைப்புகள் எல்லாம் தேவையில்லையோ அவற்றை RECORD ஆக வேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம். 

இந்த Android smartphone voice Recoder application -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download: Automatice Call Recorders

2. கால் ரெக்கார்டர் (Call Recorder)

Call Recorder - Android Apps for android smartphone

இது ஒரு சிறந்த ரெக்கார்டிங் அப்ளிகேசனாகும். உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் இதை நிறுவி எளிதாக incoming , out going call ஆகியவற்றை ரெக்கார்ட் செய்யலாம். நீங்கள் ரெக்கார்ட் செய்ததை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் உள்ள microSD card -ல் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். சேமித்து வைத்ததை லாக் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

3. ஆர்எம்சி அட்வான்ஸ் கால் ரெக்கார்டர் (RMC Advance Call Recorder)

Record my call recorder apps for smartphone
உங்கள் Android Smartphone மூலம் உங்களுக்கு வரும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளை நீங்கள் ரெக்கார்ட் செய்யலாம். தெளிவாக ரெக்கார்ட் செய்ய loud speaker -ல் வைத்து ரெக்கார் செய்ய வேண்டும். அப்போது ரெக்கார்டிங் குவாலிடி சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பினால் Google Drive, Drop Box போன்ற ஆன்லைன் சேமிப்பகங்களுடன் அவற்றை இணைத்துக்கொள்ளலாம். நாமாகவே record செய்யும் வசதியும் இந்த அப்ளிகேசனில் உள்ளது. 



தகவல் உதவி மற்றும் படங்கள்: google play, karpom.com

நன்றி. 

- சுப்புடு

Post a Comment

0 Comments