எதற்கெடுத்தாலும் நம்முடைய கம்ப்யூட்டரையே நம்பி இருக்க முடியுமா? கம்ப்யூட்டரும் மிஷின்தானே..! அதுவும் வெப்பமடைந்தால் பழுதாக வாய்ப்பிருக்கிறது..!
ஏதாவது முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் கம்ப்யூட்டர் கிராஷ்(Computer Crash) ஆகி, கோப்புகள் அனைத்தும் மாயமாகியிருக்கும். எங்கேடா அந்த முக்கியமான பைல் என்று தேடிப்பார்த்து, பைத்தியம் பிடிக்காத குறையாக தேடியிருப்பீர்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் இருக்க, அதுபோன்ற முக்கியமான கோப்புகளை (Very Important Files) இரண்டு மூன்று பேக்கப்கள் வைத்திருப்பது மிகவும் பயன்தரும். அதுவும் ஆன்லைனில் கோப்புகளை பாதுகாத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை நாம் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் இல்லையா?
ஆன்லைனில் கூட நிறைய தளங்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கிறது. கூகிள் ட்ரைவ் (Google Drive) உட்பட....
அதுபோன்றதொரு தளம்தான் Just Cloud. இத்தளத்தில் நீங்கள் விரும்பிய கோப்புகளை தரவேற்றம் செய்து, பிறகு வேண்டிய நேரத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இத்தளத்தில் உங்களுடைய கோப்புகளை (அது எவ்விதமான கோப்புகளாக இருப்பினும்)சேமித்தப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் சேமிக்கப்பட்ட கோப்புகள் அப்படியே இருக்கும். அதனால் வேண்டும்போது கோப்புகளை பார்வையிடலாம். தேவைப்பட்டால் கோப்புகளை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கோப்புகளை உங்களிடம் உள்ள கணினி, டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என எந்த சாதனமாக இருந்தாலும் பார்வையிட முடியும் என்பது இதன் சிறப்பு வசதியாகும்.
- இவ்வசதியைப் பெற ஜஸ்ட் குலூட் டாட் காமிற்குச் செல்லுங்கள்.
- அத்தளத்தில் sign up செய்யுங்கள்.
- கணினியில் உள்ள கோப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
- குளூட் டாட் காமில் தரவேற்றம் செய்யுங்கள்.
- நீங்கள் எங்கு இருப்பினும், எந்த ஒரு இன்டர்நெட் டிவைஸ் (computer, tablet pc, android mobile, iPhone, iPad ) வைத்திருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய கோப்புகளை அணுகுங்கள்.
மிகச்சிறந்த வசதியைக் கொடுக்கும் இத்தளம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.. முற்றிலும் இலவசமே.. பயன்படுத்த எளிதானது. தெளிவானது...
மேலும் விபரங்கள் அறிய இத்தளத்திற்கு Cloud Storage தளத்திற்குச் செல்லுங்கள்.
இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களிடமும் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் தளங்களின் வழியாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி..
-சுப்புடு.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.