கோணல் மாணலாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்யும் மென்பொருள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..!

ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது.

இதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி..

இதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video)
free video flip and rotate software

படங்களை எடுக்கலாம்...


நினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன்.

அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம்.

இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும்.

தலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும்.

நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotate Software)  ஆகும்.

இதில் ஒரு Mouse Click வீடியோக்களை Flip  செய்யவோ, அல்லது Rotate செய்யவோ முடியும்.

மிகவேகமாக, மிக எளிமையாக இச்செயல்களைச் செய்ய முடியும்.

எந்த எந்த கோணங்களில் வீடியோக்களை சுழற்ற முடியும், எந்தெந்த கோணங்களில் வீடியோக்களை மாற்ற முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.
  • Rotate video 180°.
  • Rotate video 90° CW.
  • Flip video vertically.
  • Flip video horizontally.
  • Flip video vertically and rotate 90° CCW.
  • Flip video vertically and rotate 90° CW.
இதில் தீங்கிழைக்கும் Malware, Adware போன்ற எந்த ஒரு நிரல்களும் இணைப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.

இச்சிறப்பு மிகு மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய;

Download: Free Free Video Rotate Software

Post a comment

0 Comments