தமிழில் விண்டோஸ் 7 பயன்படுத்துவது எப்படி?

use windows 7 in tamil language


Microsoft- ன் புதிய இயங்குதளம் விண்டோஸ் 7 ஐ தற்பொழுது பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் பல்வேறுபட்ட வசதிகள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் அவரவர் மொழியிலேயே Windows 7 ஐ பயன்படுத்த முடியும் என்பதை மிகச்சிறந்த வசதியாக குறிப்பிடலாம்.

ஆம். விண்டோஸ் 7 இயங்கு தளத்தை நம்முடைய தமிழ் மொழியில் நாம் பயன்படுத்த முடியும்.


Windows 7 -ஐ தமிழில் பயன்படுத்துவது எப்படி?

  • Windows 7 -ஐ தமிழில் பயன்படுத்த முதலில் Language Internet Pack - LIP என்ற மொழி இடைமுகத் தொகுப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
  • கீழ்க்கண்ட இணைப்பில் கிளிக் செய்து உங்களுடைய கணினிக்கு ஏற்ற 32 bit அல்லது 64 bit க்கான Language Internet Pack - LIP தரவிறக்கம் செய்துவிடுங்கள். (உங்களுடைய கணினி 32 bit அமைப்புடையதா அல்லது 64 பிட் அமைப்புடையதா என்பதைக் கண்டறிய  டெஸ்க்டாப்பில் Computer ஐகான் மீது ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்வதன் மூலம் கண்டறியலாம்.)
  • தரவிறக்கம் செய்ய : Download  Language Internet Pack - LIP
  • தறவிறக்கிய கோப்புக்களை நிறுவிக்கொள்ளுங்கள் (install). அடுத்து Next Button -ஐ கிளிக் செய்து கணினியில் காட்டக்கூடிய மொழியாக தமிழ் மொழியைத் தேர்வு செய்யவும். அதற்கடுத்து Apply display language to welcome screen and system accounts என்பதை கிளிக் செய்து, Change display language என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள். 
  • அவ்வளவுதான். இப்பொழுது கணினியை மீள்தொடக்கம் செய்யுங்கள் (Restart). இப்பொழுது அழகு தமிழில் விண்டோஸ் 7 இயங்குவதைப் பார்க்கலாம்.

இனி கணினியை இயக்க ஆங்கில அறிவு என்பதே தேவையில்லை.

சரி. தமிழுக்கு மாற்றிவிட்டோம். மீண்டும் ஆங்கிலத்திலேயே விண்டோஸ் 7 ஐ இயக்க வேண்டும். என்ன செய்வது?

அதற்கும் இரண்டு எளிய வழிகள் உண்டு.

ஒன்று:
ஸ்டார்ட் மெனு==>கட்டுப்பாட்டு பலகம் ==> காட்சி மொழியை மாற்றவும் என்பதை செய்து மாற்றலாம்.

இரண்டு:
கட்டுப்பாட்டு பலகம் ==> வட்டாரம் மற்றும் மொழி என்பதை தெரிவு செய்துகொண்டுவிட்டு, தோன்றும் திரைக்காட்சியில் விசைப்பலகைகளும் மொழிகளும் என்ற பகுதியில் காட்சி மொழி ஒன்றைத் தெரிவு செய்யவும் என்பதற்கு கீழாக English என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் மீண்டும் ஆங்கில மொழிக்குத் திரும்பிவிடலாம்.

மீண்டும் தமிழுக்கே திரும்ப எண்ணினால் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் சென்று தமிழ் மொழியைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

Control Panel ==> Change Display Language சென்று தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது

Control Panel ==> Region and Language என்பதை தெரிவு செய்து, தோன்றும் திரைக்காட்சியில் Keyboard and Language என்பதில்  Choose a Display Language என்பதின் கீழாக உள்ள தமிழ் என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் மீண்டும் தமிழ்மொழியில் விண்டோஸ் 7 - செயல்பட வைக்கலாம்.

Tags: Windows 7, Windows 7 in Tamil, Region and Language

Post a comment

2 Comments

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.