பாஸ்வேர்ட் மறந்துடுச்சா... கவலையே படாதீங்க...!!!

ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு குறைதான். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும். அதுவும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளம் போன்றவற்றிற்கு வைத்திருக்கும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நேரிடும்.

'நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களை கண்டிருக்கிறேன்.

இதற்கு முன்பு பயன்படுத்தி கடவுச் சொற்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். ஆனால் தற்பொழுது பயன்படுத்தி வந்த கடவுச்சொல்லோ நினைவிற்கு வராமல் முரண்டு பிடிக்கும்.

அதுபோன்ற நிலைகளில் Forgot Password கொடுத்து, அதில் கோரப்படும் மின்னஞ்சல்/அலைபேசி எண் கொடுத்து, அதன் பிறகு நமக்கு வரும் SMS Code - ஐ உள்ளிட்டு புதிய கடவுச்சொல் இட்டு, கணக்கை திரும்ப பெறலாம்.

ஆனால் கம்ப்யூட்டருக்கு நாம் கொடுத்திருக்கும் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் என்ன செய்வது?

இதோ, அதற்கும் ஒரு தீர்வு உண்டு.

எப்படி கடவுச்சொல் மறந்து போன கணினியை இயக்குவது?


நிச்சயம் உங்களிடம் Pen-drive இருக்கும். அதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்யலாம். ஆச்சர்யமாக உள்ளதா? 

அதாவது நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சிடாமல், உங்கள் பென்டிரைவை இணைப்பதன் மூலம், கணினி பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு திறந்துகொள்ளும். இவ்வாறு உங்கள் கணினிக்கு யூ.எஸ்.பி. அல்லது பிளாஃபி மூலம் பாஸ்வேர்ட் செட் செய்யும் முறைக்கு PASSWORD RESET DISK என்று பெயர்.

PASSWORD RESET DISK உருவாக்குவது எப்படி?

 • உங்கள் கணினியை உயிர்ப்பித்துக்கொள்ளுங்கள்.
 • Start button கிளிக் செய்து Control Panel செல்லுங்கள்.
 • யூசர் அக்கவுண்ட்ஸ் (USER ACCOUNTS)என்பதில் கிளிக் செய்யவும்.
 • அதில் உங்கள் பயனர் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
 • இப்பொழுது தோன்றும் பக்கத்தில் இடதுபுறம் Create a Password Reset Disk கிளிக் செய்யவும்.
 • இப்பொழுது உங்களுடைய USB Drive அல்லது பிளாஃபி டிஸ்க் கேட்கும்.  USB Drive ஐ செருகவும்.
 • அடுத்து அது கேட்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். அதாவது தற்பொழுது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் Password Reset Disk உருவாக்கிக்கொள்ளுங்கள்.

Password Reset Disk பயன்படுத்துவது எப்படி?

 1. உங்கள் கணினியை உயிர்ப்பித்தவுடன் Welcome Screen தோன்றும்.
 2. பிறகு உங்கள் யூசர் நேம் கொடுத்து என்டர் அழுத்தவும்.
 3. இப்பொழுது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை இணைக்குமாறு செய்தி தோன்றும்.
 4. அடுத்து யூஸ் யுவர் பாஸ்வேர் டிஸ்க் (Use Your Password Disk) என்பதில் கிளிக் செய்யவும்.
 5. அப்பொழுது பாஸ்வேர்ட் ரீசெட் விசார்ட் Password Reset Wizard திறக்கும்.
 6. அதனைத் தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட்(Password) உருவாக்குவதற்கான வழிமுறைகள் கிடைக்கும். அவ்வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் புதிய பாஸ்வேர்ட் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் பாஸ்வேர்டை மறக்கும்பொழுதும் இந்த பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாஸ்வேர்ட் ரீசெட் செய்து கற்றுக்கொண்ட நீங்கள் "வங்கி கணக்கின் பாஸ்வேர்ட்டை பாதுகாக்க" என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். 

நன்றி.

- சுப்புடு

Post a Comment

1 Comments

 1. நல்ல பயனுள்ள பதிவு.....உன்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.