விக்கிபீடியா தளத்தின் தகவல்களை தொகுத்து தரும் இணையதளம் !

Update : 12/10/2017 இந்த இணையதளம் தற்பொழுது செயல்படுவதில்லை. 

வணக்கம் நண்பர்களே..!

தங்களின் மேலான ஆதரவுக்கு என்னுடைய நன்றி..! விக்கிபீடியா(Wikipedia website) தளத்தைப் பற்றிய அறியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். தகவல் களஞ்சிய வலைத்தளமான விக்கிபீடியாவில் இல்லாத தகவல்களே இல்லை என்றும் சொல்லுமளவுக்கு தகவல் நிறைந்து காணப்படும். இவ்வாறான ஒரு பயன்மிக்க வலைத்தளம்தான் (useful websites)விக்கிபீடியா.

நாள்தோறும், நொடிக்கு நொடி, வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம் புதுப் புதுத் தகவல்களை தரவேற்றம்(upload new data, new article) செய்துகொண்டுள்ளது விக்கிபீடியா. என்ன வேண்டும் உங்களுக்கு? அத்தனை தகவல்களும் (information) விக்கிபீடியாவில் கிடைக்கும்.

இத்தகைய விக்கிபீடியா தளத்தில் உள்ளடக்கிய முக்கியமான, புதிய தகவல்களை(New data base) தெரிவிக்க உயிர்நாடியாக(Fatal) ஒரு தளம் விளங்குகிறது. தளத்தின் பெயர் விக்கிரேங்க் (wikirank) இத்தளமானது விக்கிபீடியாவில் புதிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள் எது? புதிதாக என்ன இதில் எத்தகைய தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்து அக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து படிக்க உதவுகிறது இந்தளம்.

விக்கிபீடியா தளம் கொடுக்கும் புள்ளி விபரங்களின் (Statistical information) அடிப்படையில் கட்டுரைகளை, தகவல்களை முதன்மைப்படுத்தி காட்டுகிறது இத்தளம். விக்கிபீடியா கடல் என்றால் அந்த கடலைக் கடைந்து எடுக்கும் அமிர்தமாக இந்த தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாது.

தளத்திற்கு செல்ல: http://wikirank.com/en

Post a comment

3 Comments

 1. மிக்க நன்றி சார்...

  சென்று பார்க்கிறேன் --->சொடுக்கினால் வரவில்லை...

  ReplyDelete
 2. இணைப்பு வேலை செய்யவில்லை சகோ! கவனிக்கவும்!

  ReplyDelete
 3. நன்றி @ திண்டுக்கல் தனபாலன் , வரலாற்றுச்சுவடுகள்..

  உண்மைதான். தளத்தில் ஏதோ பிரச்னை உள்ளதாக நினைக்கிறேன்...

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.