உங்களுக்கு பிடித்தவாறு கீபோர்ட்டை மாற்ற பயன்படும் மென்பொருள்

வணக்கம் நண்பர்களே..!

நாம் பயன்படுத்தும் கணினி இருக்கிறதே.. ! அதை எப்படி வேண்டுமானாலும் நாம் மாற்றிப் பயன்படுதிக்கொள்ளலாம். உதாரணமாக இடது கை பழக்கமுள்ளவர்கள், மௌஸ் கிளிக்கை மாற்றக்கொள்வதைப் போல, நமக்கு விருப்பமான முறையில் நம்முடைய கீபோர்ட்டை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

change key board keytweek

புதிதாக கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு கணினியில் விசைப்பலகையைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்கும். இவ்வாறானவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு சில விசைகளை மாற்றி அமைத்து, எளிதாக விசைப்பலகையை கையாள முடியும். இதற்கு உதவுகிறது Keytweek என்ற மென்பொருள்.

மற்றுமொரு வசதி.. தேவையற்ற, பயன்படுத்தாத விசைகளை நாமாகவே அவைகளை செயல்படாமல் செய்துவிடலாம். அதாவது அந்த விசைகளை disable செய்துவிடலாம்.

இந்த keytweek என்ற மென்பொருள் Microsoft Scan Code Map Registry settings களை மாற்றி அமைத்து அதன் மூலம் நமக்கு விருப்பமான முறையில் விசைகளை மாற்றி அமைக்கிறது. இப்படி மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு எளிதில் கிடைக்காத விசையை அருகிலேயே அமைத்து விரைவில் தட்டச்சு செய்ய முடியும்.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட விசைப்பலகை நமக்கு தேவையில்லையெனில், அந்த மென்பொருளில் உள்ள Reset என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் கணினியில் உள்ள மாறா நிலை தட்டச்சு விசைகளை (Default keyboard)மீண்டும் பெறலாம்.

இந்த மென்பொருள் மூலம் எப்படி விசைகளை மாற்றம் செய்வது?

இது ஒரு எளிதான செயல்முறைதான். இதற்கு இம்மென்பொருளில் உள்ள விசைப்பலகை அமைப்பில், தேவையான விசையைத் தேர்ந்தெடுத்து Choose New Remapping என்பதில் உங்களுக்கு தேவையான விசையைத் தேர்ந்தெடுத்து ரீமேப் கீ (remap key)எனும் பட்டனை தேர்வு செய்து அப்ளை கொடுப்பதன் மூலம் உங்களுக்கு விருப்பமான விசையை பெற முடியும். இவ்வாறு மாற்றிவிட்டு உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு நீங்கள் மாற்றிய தட்டச்சு விசையை அழுத்தினால் நீங்கள் மாற்றம் செயல்படும்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: Download Keytweek sotware

இந்த வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கு இது உதவலாம்.. நன்றி நண்பர்களே..!Post a comment

0 Comments