உங்கள் படங்களை நீங்களே மெருகேற்ற, வடிவமைக்க, வெட்ட, மாற்றம் செய்யும் எளிய வழிமுறைகள்

வணக்கம் நண்பர்களே..!

பதிவெழுதி ஒருவார காலத்திற்கும் மேலாகிவிட்டது அல்லவா? வேலை பளுவின் காரணமாக பதிவெதுவும் எழுத இயலவில்லை என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..

நண்பர்களே..! நாம் நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக டிசைன் செய்ய ஆசைப்பட்டிருப்போம். அல்லது இணையத்தில் உள்ள படங்களைப் போன்று நம்முடைய படங்களையும் அவ்வாறு மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கும். ஏன்? எனக்கும் கூட அவ்வாறான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு...
ஆசை இருக்கிறது.. ஆனால் அவ்வாறு புகைப்படங்களை மாற்றம் செய்வதற்குரிய வழிமுறைகள் தெரியாது.. என்ன செய்ய?

இதோ இதற்கு ஒரு தீர்வு...

புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி மாற்றியமைக்கவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் ஃபார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை(Delete Unwanted pixels) நீக்க திட்டமிடுவோம்.

படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விரும்புவார்கள்.

இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் Image Splitter(இமெஜ் ஃபில்டர்) என்ற இணையத்தளம் செயல்படுகிறது.

படங்களை மாற்றம் செய்யும் முறைகள்(Edit, convert, Split, Crop your images):
இந்த தளத்திற்குச் சென்றவுடன் நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட கோப்பை பதிவேற்றம்(Image) செய்திட வேண்டும்.

கோப்பின் அளவு 20MB க்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்ன வகையான செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு தரவிறக்கம் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில்(Directory) சேமித்துப் பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் மூலம் jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய ஃபார்மட்கள் கையாளப்படுகின்றன. ஃபார்மட்கள் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட உங்களுக்கு எந்த ஃபார்மட்டில் தேவையோ அந்த ஃபார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

படம் ஒன்றை ரீசைஸ்(Resize) செய்வதற்கு எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ அந்த அளவினை கொடுத்தால் போதும்.

அளவுகளைத் கொடுத்தப் பின் Resize image என்ற பட்டனில் Click செய்தால் அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் சிறப்பு என்னவெனில் நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல்(5Pixel) அளவிற்கு மாற்றினால் அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம்(Photo) கிடைக்கும்.

மேலும் நாம் தரும் வரையறைகளின் படி ஒரு படத்தை மிகச் சரியாக வெட்டிப் பல கோப்புகளாக இந்த தளம் தருகிறது. பட கோப்பு(Image file) ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை(Coloumn) மற்றும் படுக்கை வரிசை(Rows)என கொடுத்தால் போதும். உடன் ஒரு மாற்றம் செய்யப்பட்ட கோப்பானது Zip File தரவிறக்க கிடைக்கும்.

அதனை விரித்து பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை(row) மற்றும் 2 நெட்டு வரிசை(coloumns) எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.

இதற்குப் பதிலாக 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row மற்றும் 4 columns எனக் கொடுக்க வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில் படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி (Preview)காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர் நமக்கு சரி என்றால் வெட்டுவதற்கு Ok என்பதைச் சொடுக்கலாம்.

இதே போல படங்களின் அளவினைச்(Image Size) சரி செய்திடலாம். மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக, கச்சிதமாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த இச் செயல்களை அனைத்தும் செய்து முடிக்க எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. அனைத்து வேலைகளுமே இத்தளத்திலேயே செய்து முடிக்கலாம். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்...!

தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள்.. நன்றி நண்பர்களே..!


Post a Comment

2 Comments

  1. அருமை., பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நன்றி.. அறிந்துகொண்டேன்..!

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.