வீடியோக்களுக்கான தேடியந்திரம்(Video search Engines)

வீடியோவைப் பார்த்து ரசிக்க இன்று இணையத்தில் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்வதென்றால் ்கூகிளின் youtube தளம். அதேபோல சமூக தளங்களான FACE BOOK , GOOGLE PLUS, ORKUT,போன்ற தளங்களின் நண்பர்களின் உபயத்தில் நிறைய வீடியோக்களைப் பார்த்து மகிழ்கிறோம். இவ்வாறு வீடியோக்களை பார்வையிட இணையம் நமக்கு கைகட்டி சேவை செய்கிறது.

www.viirl.comஇன்று நாம் காணப்போகும் இந்த தளமும் அந்தப் பணியைச் செய்கிறது. யூடியூபில் கொட்டிக்கிடக்கும் வீடீயோக்களை வகை வாரியாகப் பிரித்து, நமது தேடல்களுக்குத் தகுந்தவாறு வீடியோக்களைத் தேடி தருகிறது. இது சிறந்த Video search Engine தளமாக செயல்படுகிறது. வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என தன்னை பெருமையாக அழைத்துக்கொள்கிறது இத்தளம். தளத்தின் பெயர் வீர்ல்.


நொடிக்கு நொடி, வினாடிக்கு வினாடி யூடியூப் தளத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தச் சூழலில் அந்த வீடியோக் கடலிலிருந்து நமக்கு வேண்டிய முத்துக்களைப் போன்ற வீடியோக்களைப் பெற்றத் தர இதுபோன்ற தளம் மிகவும் தேவையான ஒன்றுதான். இந்தப் பணியை இத்தளம் செவ்வனே செய்கிறது. நமக்கு விருப்பமான வார்த்தையைக் கொடுத்து தேடும்போது அதுதொடர்பான வீடியோக்களை முகப்புப் பக்கத்தில் கொண்டுவந்து காட்டுகிறது. விருப்பமான வீடியோக்களை கிளிக் செய்து அங்கேயே பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


வலைப்பூக்களை திரட்டி தரும் வலைத்தளங்களைப் போன்றே இது யூடியூபில் உள்ள வீடியோக்களை(YouTube videos) நமது விருப்பதிற்கிணங்க திரட்டித் தருகிறது. வீடியோ தேடலுக்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்த வீரல் தளம்.

வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்த பின் அதனை Twitter , google plus, Facebook வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இப்படிப் பகிரப்பட்ட வீடியோக்களை வரிசைப்படுத்தி எத்தனை பேரால் பகிரப்பட்டுள்ளனவோ அந்த கணக்கின் அடிப்படையில் முன்னணி வீடியோக்கள்(Leading Videos) பட்டியலிடப்பட்டு காட்டப்படுகின்றன.

வீடியோ காட்சியளிக்கும் பக்கத்தின் ஓரத்தில் அந்த வீடியோவானது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது(sharing) என்ற எண்ணிக்கையும் காட்டப்படுவது சிறப்பம்சமாகும்.

முகப்புப் பக்கத்திலேயே new videos, top videos என்ற தலைப்புகளில் வீடியோக்களை பிரித்து வரிசைப்படுத்தி பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த வீடியோதொகுப்புத் தளத்திற்குச் செல்ல சுட்டி: www.viirl.com

 நன்றி நண்பர்களே..!!

Post a Comment

0 Comments