வார்த்தைகளுக்கு shortcuts keys அமைக்க

creat shortcut keys for your words in documents
வணக்கம் நண்பர்களே..!! இலவச மென்பொருள்கள்... அது என்றும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு மந்திரச்சொல்.. இலவசம் என்றச் சொல்லே ஒரு மந்திரச் சொல்தான். இணையத்தில் இவ்வாறான இலவச மென்பொருள்களால் எத்தனையோ பணம், காசுகளை மிச்சப்படுத்தி வருகிறோம்.

அதுபோன்றே இதன் பயன்களும் கட்டண மென்பொருள்களுக்கு இணையாகவே இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் இந்த இலவச மென்பொருளும் அடங்கும். மென்பொருளின் பெயர் Quick PASTE..!
பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம். நண்பர்களே.. இந்த மென்பொருளானாது(Free software) பெயருக்கு ஏற்றார்போல விரைவாக பேஸ்ட்(Past) செய்யப் பயன்படுகிறது.

இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? பேஸ்ட் செய்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் ஒரு பதிவு என எழுதிக்கொண்டிருக்கிறீர்களே? என்கிறீர்களா...!!!!???

விஷயம் இருக்கிறது நண்பர்களே..! தொடர்ந்து ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு  வாக்கியத்தையோ அடிக்கடிப் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தையை, வாக்கியத்தை தட்டச்சிட்டுக்கொண்டே இருக்க முடியுமா?

ஒரு வார்த்தையென்றால் அதை ஒரு முறை காப்பி செய்துகொண்டுவிட்டு, மறுபடியும் பேஸ்ட் கொடுத்து பயன்படுத்தலாம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை இப்படி ஒரு டாக்குமென்ட்டில் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் அந்தந்த வார்த்தகளை தேடிப்பிடித்து அதை காப்பி செய்துகொண்டு, மீண்டும் தேவையான இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும். இது நேர விரயத்தை ஏற்படுத்தும்.

 அப்படி நிறைய வார்த்தைகளை ஒரே நேரத்தில் பேஸ்ட் செய்து பயன்படுத்த முடியாதல்லவா?

இதைத்தான் சாத்தியமாக்கியிருக்கிறது இந்த இலவச மென்பொருள் Quick Past மென்பொருள். இதில்  அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை தட்டச்சிட்டு, அந்த வார்த்தைகளுக்கு Shortcut key- அமைத்துக்கொள்ளலாம்.   பிறகு அந்த வார்த்தை தேவைப்படும் இடங்களில் நாம் அமைத்த குறுக்கு விசைகளை அழுத்தும்போது அந்த வார்த்தைகள் தானாகவே அங்கு பேஸ்ட் ஆகிவிடும்.

சுருக்கமாகச் சொல்வதெனில் வேர்ட், மற்றும் வேர்ட்பேட், நோட்பேட், எக்செல் போன்ற அப்ளிகேஷன்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை நாம் அடிக்கப்பயன்படுத்த நேரும்போது அவற்றை தட்டச்சிடாமல் அவற்றிற்கு 'ஷார்ட்கட் கீ'கள் அமைத்துப் பயன்படுத்த இந்த மென்பொருள் நமக்கு துணைபுரிகிறது. இந்த வார்த்தைகளுக்கான ஷார்ட்கட் கீகளை கணினியில் எங்கும் பயன்படுத்தலாம் என்பதில் நினைவில்கொள்ளுங்கள். இணையத்தில் ஈ-மெயில், இணையதளங்கள்(websites), வலைப்பூக்கள்(blogs) போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இவ்வாறு அட்ரஸ்(Address), வாக்கியங்கள்(Sentence), தலைப்புகள்(Heading), பழமொழிகள்(proverb) போன்றவை ஒரு முறைமட்டும் இந்த மென்பொருளில் தட்டச்சிட்டுவிட்டு, பிறகு அதற்கான குறுக்குவிசைகளை அழுத்தி அவற்றை நம்முடைய டாக்குமெண்ட்டில் இடம்பெறச் செய்யலாம். இதுபோல கணினியில் நாம் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேஷன்களிலும்(Ex: Ms-Word, Ms-Excel, word pad, notepad) இத்தகைய குறுக்கு விசைகளைப் பயன்படுத்த முடியும். இதுதான் இந்த இலவச மென்பொருளில் உள்ள கூடுதல் சிறப்பு ஆகும்.

இம்மென்பொருள் Windows 7, Windows Server 2008, Windows Vista, Windows 2003, Windows XP, Windows 2000, Windows Me, Windows NT, Windows 98 ஆகிய இயங்குதளங்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது(Support).

இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 

இனி அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தைள், வாக்கியங்கள், பொன்மொழிகள், பழமொழிகள் போன்றவற்றை தட்டச்சிட்டுக்கொண்டிருக்காமல் குறுக்கு விசைகளைப் பயன்படுத்தி எளிதில் விரைவாக தட்டச்சிட முடித்துவிடுங்கள். அற்புதமான வசதியைத் தரும் இம்மென்பொருளை தரவிறக்கிப் பயன்பெறுங்கள். மென்பொருளைப் பற்றியும், பதிவைப் பற்றிய கருத்துகளையும் எழுத மறக்காதீர்கள்.. நன்றி நண்பர்களே..!!!

Post a Comment

0 Comments