ஒரே கிளிக்கில் தொடர் கட்டுரையைப் படிக்க...!!!print what you like dot com for print only article without images and adsவணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே...!!! ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் கட்டுரைகளை முழுவதும் படிக்க முடியும். இதை விவரிப்பதுதான் இப்பதிவு...

இணையத்தில் பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்ததான் நமக்கு நேரமில்லை.. அல்லது தெரியவில்லை.. உதாரணமாக ஒருஅற்புதமான இணையத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவற்றில் உள்ள கட்டுரைகள் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நான்கைந்து பத்திகள்(paragraph) முடிந்ததும் அடுத்தப் பக்கம் செல்ல next page என்றொரு இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அந்தக் கட்டுரையானது ஒரு பத்து பக்கம் கொண்டதாக இருப்பின் அவற்றை பத்து பக்கங்களாக பிரித்து அவற்றிற்கான இணைப்பையும் வழங்கியிருப்பார்கள்.

நீங்கள் சுவராஷ்யமாக படித்துக்கொண்டு வரும்போது அந்த பக்கம் முடிவடைந்துவிடும். பிறகு அடுத்த பக்கத்தை கிளிக் செய்து படிக்க வேண்டும். இப்படியே பத்து பக்கத்தையும் கிளிக் செய்து படிக்க பத்து முறை கிளிக் செய்யவேண்டும். உங்களுக்குப் பிடித்த கட்டுரையாக இருந்தபோதிலும் அவற்றை இத்தனை முறை கிளிக் செய்ய உங்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.. இவ்வாறு சலிப்பைப் போக்கவும் ஒரே கிளிக்கில் கட்டுரை முழுவதும் படிக்கவும் Google chrome மற்றும் Firefox க்கான Extension இருக்கிறது.

இதை உங்கள் பிரௌசர்களில் நிறுவிக்கொண்டால் இத்தகைய இணைப்புகளை ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து திறக்காமல் ஒரே பக்கத்தில் கட்டுரை முழுவதையும் படித்து மகிழலாம்.. உங்களுக்கு கிளிக் செய்வதால் ஏற்படும் வெறுப்பு, நேர விரயத்தை குறைக்கலாம். மேலும் படங்கள் அடங்கிய கேலரி பக்கங்களையும் (Image Gallery Pages)இவ்வாறு கிளிக் செய்யாமல் ஒரே பக்கத்தில் இருந்தவாறே அத்தனைப் பக்ககங்களையும், படங்களையும் பார்வையிட்டு மகிழலாம்.. இதற்கான Extension பெற இந்த இணைப்பில் சென்று உங்கள் Browser-ல் இணைத்துக்கொள்ளுங்கள்...

மேலும் பிரின்ட் வாட் யூ லைக் என்ற இந்த தளமானது இணையதளத்தில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் படங்கள் இல்லாமல் அவற்றிலுள்ள கட்டுரைகளை மட்டும் பிரிண்ட் செய்யவும் பயன்படுகிறது. இத்தளத்தில் கிடைக்கப்பெறும் முழுமையான சேவைகளை அறிய கீழுள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
இனி நீங்கள் படிக்க விரும்பும் கட்டுரைகள் அல்லது படங்கள் எத்தனை இணைப்புகளைக் கொண்டதாக இருப்பினும் ஒரே கிளிக்கில் அனைத்தும் படிக்க முடியும். அனைத்துப் படங்களையும் ஒரே பக்கத்தில் பார்வையிட முடியும். இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் கீழுள்ள திரட்டிகளில் இணைத்து அவற்றிக்கான ஓட்டுகளையும் போடுங்களேன்.. பதிவு உங்கள் நண்பர்கள் மற்றும் புதியவர்கள் அனைவரையும் சென்றடையட்டுமே..!!!

நன்றி நண்பர்களே..! மற்றுமொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்...!!!

Post a Comment

2 Comments

  1. பரவாயில்லையே இதுவும் நல்ல டெக்னிக்காத்தான் இருக்கு .. :)

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.