உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர்(Device Driver) பேக்அப் எடுக்க இலவச மென்பொருள்!

வணக்கம் அன்பு சகோதரர்களே..!! நலமா? மற்றுமொரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றும் ஒரு புதிய பயனுள்ள மென்பொருளைப் பற்றியே இந்த பதிவு அமையப் போகிறது.

windows device driver
விண்டோஸ் 7 - டிவைஸ் டிரைவர்
உங்கள் கணினி இருக்கிறது அல்லவா? அதில் நிறைய பகுதிகள் இருக்கிறது. உங்களுக்கு அடிப்படைக் கணினி அறிவு இருக்கிறதெனில் இப்பதிவு முழுவதும் உங்களுக்கு எளிதாக புரியும்.

நீங்கள் நெடுங்காலமாக கணினியைப் பயன்படுத்தி வருகிறீர்களெனில், உங்கள் கணினிக்கான மென்பொருள்களையும், கணினி இயக்கத்திற்கு தேவையான முக்கிய மென்பொருகளான இயங்குதளம்(Operating System) போன்றவைகளை நிச்சயம் பேக்அப் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
அப்போதுதான் உங்கள் கணினியில் ஏதேனும் கோளாறு ஏற்படினும், அதை சரிசெய்ய முடியும். உங்கள் கணினி திடீரென இடைநிறுத்தம் செய்யலாம். செயலிழந்து போகலாம்.. அப்போது என்ன செய்ய முடியும்.? புதிதாக தான் கணினியை ஃபார்மட்(Format) செய்ய வேண்டும்.

உங்கள் கணினியை பார்மட் செய்வது என்பதும் இப்போது ஒரு எளிதானதொரு வேலைதான். இதைப் பற்றி தனிப் பதிவில் காண்போம்.

Linux device driver
லினக்ஸ் டிவைஸ் டிரைவர்

இப்போது நான் சொல்ல வந்ததே இதுதான். உங்கள் கணினியில் இப்படி பார்மட் செய்யும்போது கணினிக்குரிய டிவைஸ் டிரைவர் சாதனங்கள் (மென்பொருள்கள்) உங்களிடம் இருக்க வேண்டும். இது கணினி புதிதாக வாங்கும்போது அனைத்தும் தந்திருப்பார்கள்..

குறிப்பிட்ட காலம் வரை நன்றாக வேலை செய்த கணினி திடீரென வேலை நிறுத்தம் செய்தால், மீண்டும் அதை இயக்கத்துக்கு கொண்டுவர புதிதாக பார்மட் செய்ய வேண்டும். அப்போதுதான் கணினியுடன் வந்திருந்த CD-க்களைத் தேடுவோம்.

கணினி வாங்கிய புதிதில் அதனுடன் கொடுக்கப்பட்ட Device Driver கோப்புகளடங்கிய சி.டி அப்போதைக்கு அதைக் கண்டுக்கொள்ளாமல் எங்காவது வைத்திருப்போம். நமக்குத் தேவையானபோது அவை கிடைக்காது. அல்லது தொலைந்து இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வது?

Double Driver
டபுள் டிரைவர் - (டிவைஸ் டிரைவர் பேக்கப் சாப்ட்வேர்)
கணினியை மீண்டும் இயக்க இத்தகைய டிஸ்க் டிரைவ் சி.டிக்கள் தேவை. குறிப்பாக மதர் போர்டு சி.டி. (Mother Bodar CD), கிராபிக்ஸ் சி.டி, வீடியோ , கிராபிக்ஸ் கோப்புகளடங்கிய சி.டிக்கள் அவசியம் தேவை. இந்த கிராபிக்ஸ் சி.டி இல்லையெனில் நமது கணினியில் திரைத்தோற்றம் சரியாக வேலை செய்யாது. திரையில் நிறைய கோடுகள் அல்லது ஒரு விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே தான் அந்த டிவைஸ் டிரைவர்களின் பேக்கப்பை நமது கணினியில் நிறுவியிருக்கும்போதே அதை பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு உதவுகிறது ஒரு அரிய மென்பொருள்.. இது முற்றிலும் இலவசமே..!! இந்த மென்பொருளை தரவிறக்க http://www.boozet.org/dd.htm இங்கு செல்லவும்.

இந்த வகையான டிவைஸ் டிரைவர் கோப்புகளெதற்கு? இது எதற்கு பயன்படுகிறது எனபதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்.

இந்த டிவைஸ் டிரைவர்கள் என்பது உங்கள் கணிப்பொறியின் இயங்குதளமும்(Operating System) அதனுடன் தொடர்புடைய கீபோர்ட், பிரிண்டர், மவுஸ் போன்ற பாகங்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும். அவற்றை கட்டுப்படுத்தவும் எழுதப்பட்ட புரோகிராம்களின் தொகுப்பே இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகள்(Device Driver Files) ஆகும்.  இத்தகைய டிவைஸ் டிரைவ்கள் எப்போதும் நமது கணினி பழுதுபட்டால், இயங்காமல் நின்றுபோனால் அப்போது நிச்சயம் இது தேவை.

எனவே நான் மேற்சொன்ன இணைப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையானபோது இது மிகவும் பயன்படும். அதாவது, உங்களுக்குத் தேவையான மென்பொருளை பேக்கப் எடுத்துக்கொள்ளலாம்.

இம்மென்பொருளின் நன்மைகள்:-

இம்மென்பொருளின் துணையால் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, எந்த வகையான நிறுவனம் என தெளிவாக அறியலாம்.

அனைத்து டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை பிரிண்ட் செய்யலாம்.
ஒரே ஒரு கிளிக்கில் Backup/Restore செய்ய முடியும்.

இது முற்றிலும் இலவசமே.. கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.


மற்றுமொரு பயனுள்ள இலவச மென்பொருள் அறிமுகப் பதிவில் சந்திப்போம். இப்போதைக்கு விடைபெறுகிறேன். மீண்டும் விரைவில் வருவேன்.. காத்திருங்கள்..நன்றி நண்பர்களே..!!! 


Post a Comment

0 Comments