புகைப்படங்களின் மீது தமிழில் எழுத ADD TEXT TO PHOTO - கூகுள் பிளசில் புதிய வசதி !!!

பேஸ்புக்கிற்கு இணையாக வளர்ந்துவரும் சமூக தளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்திருக்கின்றனர். இனி கூகுள் பிளசில் போட்டோக்களை பகிரும்போதே அந்த படங்களின் மீது நாம் விரும்பியபடி போட்டோக்களின் மீது தமிழில் எழுத முடியும்.

குறிப்பாக தமிழ்மொழியை ஆதரிக்கிறது. இது ஒரு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி! பொதுவாகவே புகைப்படங்களின் மீது எழுதும் வசதியை தராத சமூகதளங்களிலிருந்து இப்போது கூகுள் ப்ளஸ் மாறுபட்டிருக்கிறது.


வழக்கம்போல நீங்கள் புகைப்படங்களை google+ -ல் தரவேற்ற add to photo என்பதை கிளிக் செய்வீர்கள் அல்லவா? அதன்படியே புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பின்னர் அதில் படத்தின் கீழே edit photos, tag people, add text, add more என்ற வரிசையில் add text என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

கூகுள் பிளசில் போட்டோகளின் மீது  Add to Text வசதி
தோன்றும் விண்டோவில் மூன்று நிலைகளில் top text, middle text, bottom text என்ற விருப்பங்களில் உங்களுக்குத் தேவையான கட்டத்தில் படங்களின் மீது சேர்க்க வேண்டிய வார்த்தைகளை தட்டச்சு செய்து, நீங்கள் விரும்பினால் வலது பக்கத்திலிருக்கும் T என்பதை சொடுக்கி வேண்டிய எழுத்துருவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இறுதியாக Save என்பதை சொடுக்கி மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இப்போது நீங்கள் தட்டச்சு செய்த வார்த்தைகள் உங்கள் புகைப்படங்களின் மீது அழகாக காட்சி அளிக்கும்.


பதிவைப் பற்றிய தங்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் மறக்காமல் பகிருங்கள்..பதிவில் ஏதேனும் சந்தேகம் எனில் கருத்துரையின் வாயிலாக கேட்கலாம்..! மற்றுமொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். நன்றி நண்பர்களே..!!

Post a comment

0 Comments