பிளாக்கரில் Alexa Widget சேர்ப்பது எப்படி?

முதலில் இந்த Alexa Widget எதற்கு என்று சொல்லிவிடுகிறேன்.
உங்கள் வலைபூ(Blog) அல்லது வலைதளம் (Website) இருக்கிறது இல்லையா ? அதன் தரத்தை அறிய இந்த விட்ஜெட் பயன்படுகிறது. ரேங்க் குறைந்தால் அதிக மதிப்புடையதாக கருத்தப்படும். நமது பள்ளிக்கூட ரேங் எப்படியோ அப்படி.
சரி. இந்த அலெக்சா தளம் எப்படி இதை கணக்கிடுகிறது.. ?
இந்த கேள்விக்கான பதிலுக்கு முன் இதையும் சொல்லிவிடுகிறேன்.
முதலில் இந்த அலெக்ஸா என்றால் என்று தெரிந்துகொள்வோம். அலெக்ஸா என்பது வலைளத்தங்களை தரத்தை அறிய தருவதற்காக Amazon நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு வலைதளம்.
உங்கள் தளத்தில் தகவல்களைப் பெற்று இந்த (ரேங்கை)தரத்தை உங்களுக்கு கணக்கிட்டு தருகிறது.
உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் பார்வையாளரின் எண்ணிக்கை, பக்கப்பார்வைகள், எவ்வளவு நேரம் உங்கள் தளத்தில் பார்வையாளர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதன்படி உங்களுக்கு உங்களுடைய தளத்தின் அலெக்ஸா மதிப்பு எவ்வளவு என்பதை காட்டுகிறது.
சரி. இந்த அலெக்சா விட்ஜெட்டை எப்படி வலைப்பூவில் சேர்ப்பது.
இது மிகவும் எளிதுதான்..
- http://www.alexa.com/siteowners/widgets இந்த தளத்திற்கு செல்லவும்.
- alexa site stats button என்பதை கிளிக் செய்து உங்கள் தளமுகவரியை கொடுக்கவும்.
- தளத்தின் முகவரியை கொடுத்தவுடன் Build Widget கிளிக் செய்யவும்..
- அடுத்து தோன்றும் சாளரத்தில் (Window) உங்களுக்குப் பிடித்தமான விட்ஜெட்டின் நிரல்வரிகளை காப்பி செய்துகொண்டு...
- உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்துகொள்ளுங்கள்..
- dashboard==>desing==>Page Element==>
- அங்கு காணப்படும் Add gadget==> தேர்ந்தெடுங்கள்.(எந்த இடத்தில் உங்களுக்கு விட்ஜெட் வேண்டுமோ அந்த பகுதியிலுள்ள Add gadget என்பதை கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம்)
- பிறகு தோன்றும் விண்டோவில் HTML/JavaScript==> என்பதை தேர்ந்தெடுத்து நீங்கள் காப்பி செய்த நிரல்வரிகளை அதில் பேஸ்ட் செய்யவும்.
- பிறகு Save என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.. முடிந்தது.
இனி உங்கள் வலைப்பூவை புதிய விண்டோவில் திறந்து பார்க்கவும்.
அலெக்ஸா விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் இணைந்திருக்கும். வளைதளத்திற்கு இதே முறையைப் பின்பற்றலாம்...!!!
நன்றி நண்பர்களே.. மீண்டும் அடுத்த பதிவின் வழி சந்திப்போம். அதுவரை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? பதிவைப் பத்தி கமெண்ட் போடுங்க. உங்களுக்கு பிடித்தமான இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் பதிவை இணைத்துவிடுங்கள். பலரும் பயனடையட்டுமே!! பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். நன்றி நண்பர்களே..!!
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.