Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..!!!

Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பப்பட்ட Bsnl நம்பரைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..

வணக்கம் நண்பர்களே.. பதிவிட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. இந்த செய்தியை படித்தவுடன் நமது சாப்ட்வேர் சாப்ஸ் வாசகர்களுக்கு பகிரலாம் என்ற ஒரு எண்ணம்..

பதிவிற்கு வருவோம்..

இந்தியாவின் அரசு நிறுவனமான BSNL ஓர் புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது..ஆம். ஆன்லைன் மூலமாக நீங்கள் விருப்பப்பட்ட எண்ணைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. இதற்கு முன்பு ஆந்திராவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பிறகு தற்போது இந்தியா முழுவதுமாக இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களாக 20 லட்சம் பேர் கிடைப்பார்கள் என்பது பி.எஸ்.என்.எல்-ன் கணிப்பு.

இதைப்பற்றிய ஆங்கில அறிவிப்பை பாருங்கள்: “Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers"

சரி. உங்களுக்கு விருப்பமான BSNL(Bharat Sanchar Nigam Limited) எண்ணை ஆன்லைனில் தேர்வு செய்வது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

சென்னை வாடிக்கையாளர்கள் என்றால் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.
http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ் நாட்டிலுள்ள மற்ற பகுகளில் வசிப்பவர் எனில் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.
http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
மற்ற மாநிலங்களில் வசிப்பர்கள் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.
http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html

மேற்கண்ட இணைப்பில் தங்களுக்கு பொருத்தமான இணைப்பின் வழியே சென்று அங்கிருக்கும் available GSM Numbers என்பதில் ஏதாவது எண் ஒன்றைத் தேடுந்தெடுத்து(எண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணிற்கு அருகில் சிறிய பெட்டியில் சொடுக்கினால் பெட்டியின் பச்சைநிற குறி தோன்றும்), பிறகு மேலிருக்கும் Reserve Number என்பதை சொடுக்கவும்.

bsnl logo

உடனே வேறொரு பக்கம் திறந்துகொள்ளும். அதில் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து submit என்பதை அழுத்தவும்..

bsnl confirmation mobile number


உங்கள் மொபைலுக்கு ஒரு பின்(PIN) நம்பர் sms ஆக வரும். ஒரு வேளை PIN number உங்கள் மொபைலுக்கு வரவில்லை எனில் மேலிருக்கும் சிவப்பு நிற எண்ணைக் உள்ளிட்டு submit என்பதை அழுத்தவும்.  இப்போது உங்களுடைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுவிடும்.

bsnl confirmation pin number


பிறகு நீங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாக (72 மணி நேரத்திற்குள்ளாக) அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சென்று உங்களுக்கான அடையாள சான்றுகளை(ID Proof) கொடுத்து உங்களுக்குரிய எண்ணை வாங்கிக்கொள்ளலாம்.

இதுபோலவே குறுஞ்செய்தி(SMS) மூலமும் எண்ணை பதிவு செய்துகொள்ள முடியும்.

NLIST Circle Code 1-5 digits 

உதாரணத்திற்கு : NLISTCHN00117 என்ற வரைமுறையில் தட்டச்சு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த குறுஞ்செய்தி பதிவு முறையில் BSNL வாடிக்கையாளர்கள் 53734 என்ற எண்ணிற்கும், பிற வாடிக்கையாளர்கள் 9494453734 என்ற எண்ணிற்கும் SMS அனுப்ப வேண்டும்.

நான் முயற்சி செய்து இவ்வாறு அனுப்பியிருக்கிறேன்.. நீங்களும் உங்களுக்குத் தேவையானால் முயற்சிக்கலாமே.. மேலும் சந்தேகத்திற்கு பின்னூட்டம் வழியே கேட்கலாம்.. அல்லது BSNL-ன் தளத்தையும் பார்வையிடலாம். http://sancharsoft.bsnl.co.in

தளத்தில் இதுபற்றி ஆங்கிலத்தில் இருக்கும் அறிவிப்பு உங்களுக்காக:

The following are the GSM Prepaid Mobile Numbers available for release:- (The Numbers can be scrolled or searched for selecting the choice Numbers. Maximum selection is limited to One Only)
Tamilnadu Telecom Circle anounces the release of Prepaid GSM Mobile Numbers to the customers by choice.
1) The Customer can select any One GSM Mobile number of his choice from the available numbers. On his/her selection of choice number (Max. No 1) the customer will get an SMS with a PIN of 7 Digits Valid for 72.hrs Only. The customer need to input the 7 digit PIN in the web site confirming the selection is over and taken.
2) Now the customer is free to approach the nearest Customer Service Center or Franchisee and inform him the Mobile Number and PIN received to get the selected choice number accross the counter by submitting the requisite Documents and completing the formalities of release of New Connection.

நன்றி நண்பர்களே.. வேறொரு பயனுள்ள பதிவின் வழி சந்திக்க முற்படுவோம்.. வணக்கம். பதிவைப்பற்றி தங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்க வேண்டுகிறேன்.


Post a Comment

1 Comments

  1. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.