இனி Gmail chat ங்கில் போட்டோக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!!

அன்பு நண்பர்களே.. நம்மில் பலர் இணையத்தை அதிகம் பயன்படுத்திக்கொண்டு உள்ளோம்..அதிலும் ஜிமெயில் பயன்படுத்தாதவர்கள் எவரும் இருக்க மாட்டோம். google வழங்கும் வசிதிகளில் முதன்மைப் பெற்ற இந்த ஜிமெயிலை ஏராளம்.. தினம் தினம் புத்தம் புதிய வசதிகளோடு, பல நல்ல உத்திகளையும் நமக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது.. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் Gmail Chat-ல் நிறைய வசதிகள் (வீடியோசாட், google talk..இப்படி) இருக்கிறது. அதன் கூடவே புதிதாய் இந்த வசதியும் தற்போது கூகுள் வழங்கியிருக்கிறது..

அது நாம் சாட் செய்யும்போது நம்முடை புகைப்படத்தையும்(photo) வையும் பகிரும் வசதிதான் அது.

இந்த வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் கூகிள் குரோம் உலவியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்..

கூகுள் குரோம் இல்லாதவர்கள் இங்கு GOOGLE CROME (http://www.google.com/chrome/eula.html?hl=en&brand=CHMA&utm_campaign=en-in&utm_source=en-in&installdataindex=homepagepromo) சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

நீங்கள் கூகிள் குரோம் உலவி (Google Browser) பயன்படுத்துபவராக இருந்தால் இந்த GChat Pix plugin-(நீட்சி)யை தரவிறக்கிக்கொள்ளவும்.


தரவிறக்கிய நீட்சியை இன்ஸ்டால் செய்துகொண்டு உங்கள் கூகுள் உலவியை ரெஃப்ரஸ் செய்து பார்த்தால் அதில் நீட்சி இணைந்திருக்கும்.

இன்ஸ்டால் செய்யும் முறைகள் படங்கள் வழியாக..

Gchat pix plugin

Install Gpix pluginf


Gchat pix after added

சோதனை செய்து பார்க்க உங்கள் குகிள் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்துகொள்ளவும்.. அல்லது உங்கள் gmail -ஐ ஓப்பன் செய்து நண்பர்களுடன் சாட் செய்து பாருங்கள்..

ஏதாவது சாட்டிங்கிள் படங்களை பகிர வேண்டுமானால்.. அதற்கான யூ.ஆர்.எல் -ஐ சாட் விண்டோவில் கொடுத்தால் படம் பகிரப்படும்.

இன்னும் ஒரு எளிய வழி நீங்கள் படத்தை இழுத்து சாட் விண்டோவில் விட்டாலே போதும்.. அந்த படம் நண்பருக்கு பகிரப்படும்.

பதிவைப் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.. உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்.. நன்றி நண்பர்கள்..!!

Post a Comment

0 Comments