

ஆம் இனிய நெஞ்சங்களே..இனி நீங்கள் எந்த ஒரு மென்பொருள்(software) துணையுமின்றி உங்களுடைய ரகசிய கோப்புகள் அடங்கிய போல்டர்களை மறைக்கலாம்.
இதோ அதற்கான சுலப வழி ஒன்றை சொல்லப்போகிறேன்.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது start button அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும்.. தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.
Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும்.. அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய போல்டர் உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும். E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள். இப்போது
D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல்
attrib +h +s foldername
அதாவது இப்படி இருக்க வேண்டும்
D:/>attrib +h +s foldername
(இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு போல்டரின் பெயர் songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள்.)
இவ்வாறு இருக்க வேண்டும்.
D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டர் காணாமல் போய் இருக்கும்.
படத்தை பெரியதாக பார்க்க கிளிக் செய்யவும்.
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் - குறி இட்டால் போதும்.
அதாவது இப்படி,
D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த போல்டர் உடனே கண்ணுக்குத் தெரியும்.
தெளிவாகப் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.
முக்கிய குறிப்பு: இதில் முக்கியமாக நம் நினைவில் நிறுத்த வேண்டியது.. எந்த போல்டரை மறைக்கிறோமோ அந்த போல்டர் உள்ள டிரைவின் பெயர் மற்றும் போல்டரின் பெயர் ஆகியவற்றை நிச்சயமாக நாம் நினைவில் நிறுத்தியிருக்க வேண்டும்.
என்ன நண்பர்களே இது மிகவும் சுலபம்தானே.. பயனுள்ளதாக இருந்ததா? எனில் பின்னூட்டம்(comment) இடுங்கள்..! உங்கள் பின்னூட்டம் எனது முன்னேற்றம்.! மற்றுமொரு நல்ல, புதிய, பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..! நன்றி நண்பர்களே.!!
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.