Gmail Account கிரியேட் செய்வது எப்படி?

Gmail Account கிரியேட் செய்வது எப்படி? (Update : 14-10-2017)

மிக சுலபம்.  உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பிரௌசரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். (இன்டர்நெட் கனெக்சன் கட்டாயம் இருக்க வேண்டும். :) )

www.gmail.com இணையதளத்திற்கு செல்லவும்.
அங்கு உள்ள பக்கத்தில் More Options என்பதினை கிளிக் செய்திடவும்.

இப்பொழுது தோன்றும் கீழ்விரி பட்டியில் உள்ள Create Account என்பதினை கிளிக் செய்திடவும்.


இப்பொழுது தோன்றும் பக்கத்தில் உள்ள Name, Choose your username, create a password போன்ற  அனைத்து கட்டங்களையும் நிரப்பவும். 


இறுதியாக Next Step என்பதினை கிளிக் செய்திடவும்.  அடுத்து இவ்வாறு ஒரு பக்கம் (Privacy and Terms) தோன்றும். 



அதில் I Agree கொடுக்கவும். பிறகு அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களுடைய மொபைல் எண் கொடுத்து, வெரிபிகேஷன் கோட் பெற Text Message / Voice Call என்பதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து Continue கொடுக்கவும். 



உடனே உங்கள் மொபைல் போனுக்கு ஒரு வெரிபிகேஷன் கோட் வரும். அதை கொடுத்து வெரிபிகேஷன் செய்து முடித்துவிட்டால் போதும்.

உங்களுடைய "ஜிமெயில்" அக்கவுண்ட் ரெடி.

இனி, நீங்கள் அதன் வழியாக நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிடலாம்.

==============================================================

பழைய பதிவு:

ஆம். அன்பு நெஞ்சங்களே.. இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு உலகெங்கிலும் தன் வெற்றிக்கொடியை நாட்டிக்கொண்டிருக்கும் கூகிளின் gmail பற்றித்தான்.

இதில் பல வசதிகள் நாள்தோறும் வந்துகொண்டிருந்தாலும், இணையத்திற்கு நாள்தோறும் அறிமுகமாகும் புதியவர்களுக்கு இப்பதிவு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Google-ல் பல வசதிகள் வந்துவிட்டாலும், அதில் முதன்மையாக திகழ்வது இந்த ஜிமெயில்தான்.

வாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஜிமெயில் ஐ.டி எப்படி கிரியேட் செய்வது என்பதை கற்றுக்கொடுக்கிறேன்.


  • முதலில் நீங்கள் உங்களுடைய பிரௌசரை(internet explorer, firefox, chrome) ஓப்பன் செய்து கொள்ளுங்கள். 
  • அட்ரஸ் பாரில் www.gmail.com என்று அடியுங்கள். இவ்வாறான ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.







அந்த பக்கத்தில் new to gamil? என்ற கேள்விக்கு பக்கத்திலேயே creat an account என்ற பட்டன் இருக்கும். அதில் கிளிக் செய்யுங்கள். அதில் இவ்வாறான ஒரு ஃபார்ம் ஓப்பன் ஆகும்.



அதில் வேண்டிய விபரங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்.


1. first name என்ற இடத்தில் உங்களின் பெயரில் முதல் பாதியை கொடுத்துவிடுங்கள் .
2. lats name என்ற இடத்தில் உங்களின் இறுதி பாதியை கொடுத்துவிடுங்கள்.
3. desired login name என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டிற்கான ஐ.டி. எப்படி இருக்க வேண்டும் நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ அப்படி பெயரைக் கொடுத்துவிடுங்கள்.
நான் , suppudukutty என்று கொடுத்தேன். என்னுடைய ஜிமெயில் ஐ.டி. suppudukutty@gmail.com என்று வரவேண்டும் என்பதற்காக கொடுத்தேன்.
4. அதன்பிறகு நீங்கள் மனதில் நிறுத்தும் வார்த்தையை, அல்லது உங்களுக்குப் பிடித்த password என்ற பகுதியில் கொடுக்கவும்.
5. மறுபடியும் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
6. security question என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு விடையளிக்கவும். இவ்வாறு அனைத்துப் பகுதிகளையும் நிரப்பிவிட்டு இறுதியில்


I accept . Create my Account என்பதை கிளிக் செய்தால் இவ்வாறான விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் verify your account என்ற ஒரு பார்ம் இருக்கும். அதில் வேண்டிய விபரங்களை கொடுக்கவும்.

நீங்கள் உண்மையாகவே அக்கவுண்ட் உருவாக்குகிறீர்களா? உங்களுக்குத்தான் உருவாக்குகிறீர்களா? என்பதை சோதனை செய்து பார்க்கவும், மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை காப்பதற்காகவும் இந்த பார்ம் ஜிமெயில் உருவாக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இதில் உங்கள் மொபைல் நெம்பரைக் கொடுத்தால் உங்கள் மொபைலுக்கு  வெரிபிகேஷன் கோட் வரும். அதை இந்த படிவத்தில் நிரப்பி உறுதி செய்துகொள்ளுங்கள். இப்போது புதியதாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை நீங்களே உருவாக்கி முடித்திருப்பீர்கள்.

இவ்வாறு உங்களுக்கான புதிய ஜிமெயில் அக்கவுண்டை உங்களாலேயே உருவாக்கிக்கொள்ள முடியும்.

குறிப்பு: எளிய ஆங்கிலம் தெரிந்தாலே எளிதாக அதிலுள்ள குறிப்புகளைப் படித்து நீங்களே ஜிமெயிலை உருவாக்க்கிகொள்ளலாம்.

இதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் கடிதங்களை பரிமாறிக்கொள்ளலாம். வேண்டிய தகவல்களையும் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

புதியதாக இணையத்துக்கு அறிமுகமாகிய நண்பர்கள் பலர் என்னிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க இப்பதிவு பதிவேற்றப்பட்டது. மேலும் விபரங்கள் மற்றும் சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ள மறக்காதீர்கள். அதேபோல் பின்னூட்டம் இடவும் மறக்கவேண்டாம். நன்றி.! நண்பர்களே..! மற்றுமொரு புதிய உபயோகமுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

Post a Comment

0 Comments