ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மென்பொருள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது!

ஜாதகங்களைக் கணித்துப் பிரதி போட்டு எடுத்துக் கொள்ளலாம் அல்லது கணினியிலே சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். இது User Friendly Software என்பது குறிப்பிடத்தக்கது!
உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும் கொடுத்தால் போதும்..!!

1. பெயர்

2. பிறந்த தேதி

3. பிறந்த நேரம்

4. பிறந்த ஊரின் பெயர் (கிராமமாக இருந்தால் அருகில் உள்ள நகரத்தின் பெயர் (City or Town)

30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயரைக் கொடுக்கலாம்..!

இந்த மென்பொருள் பல அம்சங்களோடு ஜாதங்களைக் கணித்துக் கொடுக்கும் திறன் பெற்றது!. இராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், பாவச்சக்கரம், தாசாபுத்திகள், அஷ்டவர்க்கம், ஜாதகத்தில் உள்ள நல்ல/கெட்ட யோகங்கள் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!

இந்த அற்புதமான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளத்தின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் தரவிறக்கிப் பதிவு செய்து வைய்யுங்கள்!!

Sri Jagannatha Horo - Vedic Astrology Software - Verson 7.5

URL: http://www.vedicastrologer.org/jh/

ஊரின் பெயர்களெல்லாம் அதிலேயே உள்ளன.ஒரு வேளை உங்களுடைய நகரம்(city or town) விடுபட்டிருந்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறது.

உங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும் (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது.

பல நல்ல உள்ளம்கொண்டவர்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறிய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன.

தளத்திற்கான இணைப்பு : www.heavens-above.comJagannatha Hora version 7.3

Free Vedic Astrology Software

Jagannatha Hora

Fresh and full installation of Jagannatha Hora


பார்த்து பயன்பெறுங்கள்.. இனி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ, நண்பர்களுக்கோ அவர்களின் ஜாதகத்தை உருவாக்கி நண்பர்களின் பாராட்டைப் பெறுங்கள்...!!

என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்..! நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..!!

Post a Comment

7 Comments

 1. உங்கள் பதிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .மேலும் இது போல் பல பயன் உள்ள பதிப்புகளை வெளியிடுங்கள் .

  ReplyDelete
 2. உபயோகப்படுத்த மிகவும் கஷ்டமாக உள்ளது..

  ReplyDelete
 3. இதில் ஆங்கில மொழியில் வருகிறது.தமிழ் மொழியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து தமிழில் பயன்படுத்துவதர்க்கு உதவி செய்யவும்.நன்றி செந்தில்குமார்

  ReplyDelete
 4. இதில் ஆங்கில மொழியில் வருகிறது.தமிழ் மொழியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து தமிழில் பயன்படுத்துவதர்க்கு உதவி செய்யவும்.

  நன்றி

  செந்தில்குமார்

  ReplyDelete
 5. மிக வும் அருமை

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.