உங்கள் PDF பைல்களுக்கு நீங்களே Water Mark போட ஒரு சிறந்த இணையதளம்!

முதலில் PDF ஃபைல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.  PDF என்பது Portable Document Format என்பதன் குறுக்கம் ஆகும்.

அதாவது நாம் உருவாக்கும் documents - களை aligning மாறாமல் இருப்பதற்காகவும், மற்றவர்கள் அந்த கோப்பில் எடிட் செய்யாமல் அப்படியே பயன்படுத்திடவும் இந்த வகை PDF பார்மட் உதவுகிறது. இந்த வகை பார்மட்களில் உள்ளதை படிக்கலாம்.. ஆனால் அதில் நம்மால் Edit செய்வது கடினம்.

இத்தகைய பார்மட்களை அலுவலகங்களில் முக்கியமான கோப்புகளுக்கு பயன்படுத்துகிறோம்.  இணையம் ஊடாக வெளிவரும் தேர்வு முடிவுகள் கூட PDF Format வடிவில்தான் வெளியிடப்படுகின்றன.
online pdf watermark tool

நாம் நமக்காக உருவாக்கிய பி.டி.எப் பார்மட் பைல்களை பாதுகாக்கவும், அந்த கோப்பு நம்முடையதுதான் என தனித்துவப்படுத்தவும், WATER MARK வாட்டர் மார்க் அவசியம்.

சாதாரணமாக MS-Office - ல் வாட்டர் மார்க் இடுவது மிக எளிதானதாகும். அதைப் போலவே நம்முடைய பி.டி.எப் பைல்களில் சுலபமாகவும், எளிதாகவும் water mark இட இந்த பயனுள்ள PDFaid இணையதளம் பயன்படுகிறது.

PDF கோப்புகளுக்கு வாட்டர் மார்க் - Water Mark இடுவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும், உடனடியாக வாட்டர் மார்க் இடுவதற்கு இவ்விணையதளம் பயனுள்ளதாக இருக்கும். இந்த வெப்சைட்டில் பி.டி.எப். கோப்புகளை UPLOAD செய்து, குறிப்பிட்ட செயல்களை செய்வதன் மூலம் எளிதாக வாட்டர்மார்க் இடலாம்.

இத்தளத்தின் சிறப்புகள் மற்றும் WAter marK செய்யும் முறை: 

1. முற்றிலும் இலவசம்..
2. அதிக பட்சமாக 20mb வரையுள்ள பைல்களை தரவேற்றி அதற்கு வாட்டர் மார்க் போடலாம்.
3. எளிதாக செயல்படுத்தும் விதமாக அமையபெற்றிருப்பது.
4. water mark color - களை நமக்குத் தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்.


படத்தில் காட்டியுள்ளபடி இந்த தளத்திற்கு சென்று தேவையான தகவல்களையும் மற்றும் எழுத்தின் வகை, எழுத்தின் அளவு, எழுத்தின் வண்ணம் என்பனவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு கொடுத்து, இறுதியாக உள்ள Water mark pdf என்பதை கிளிக் செய்தால் போதுமானது. உங்களுக்குத் தேவையான வாட்டர்மார்க் உங்கள் pdf கோப்புகளில் சேர்ந்திருக்கும்.நண்பர்களே இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளலாமே!

Tags: free online PDF water mark maker, Free software, PDF water marker, Online Tools, இலவச மென்பொருள்கள், online pdf watermark tool.

Post a Comment

0 Comments