இலவசமாக ஆன்லைனில் Anti virus scan செய்ய அற்புதமான தளம்..!!


bitdefender online virus scannerநண்பர்களே! எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும், ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்துவிடுகிறது..  ஒரு நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் சாப்ட்வேரை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கனிணியில் புதிய வைரஸ்கள் வந்து நம்முடைய கணினியை செயலிழக்க வைக்கக்கூடிய அபாயம் கூட இருக்கிறது.

இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பதற்காகவே ஆன்லைன் ஸ்கேனர்கள் இருக்கின்றன. அப்படி ஒரு அருமையான தளம் இது. பெயர் பிட்டிஃபைன்டர்.

 தளத்தின் சுட்டி..

http://www.bitdefender.com/scanner/online/free.html
சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன் (start scan)கொடுத்து உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியில் வைரஸ்தாக்கம் இருந்தால் அதை களைந்து விடுகிறது இந்த தளம்.  உங்கள் கணினியை என்றும் வேகம் குறையாமல் வைரஸ்களிடமிருந்து காப்பாற்றிட இத்தளம் மிகவும் பயன்படும்.

 இப்பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்..பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டமிட மறக்காதீர்கள்..! உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்..!

Post a Comment

0 Comments