சிம்பிளா ஒரு dropdown menu மெனு உருவாக்கலாம் வாங்க..!!

சிம்பிளா ஒரு dropdown menu  மெனு உருவாக்கலாம் வாங்க..!!

நண்பர்களே வணக்கம். நான் பதிவுலகிற்கு புதிதுதான் என்றாலும் கோடிங் என்று எடுத்துக்கொண்டால் நானும் ஒரு புலிதான்..!!(புலி என்றதும் கொட்டை எடுத்ததா எடுக்காத்தா? என்று கேட்டுவிடாதீர்கள்) சும்மா ஒரு வெளம்பரத்துக்காக அவ்வாறு சொல்லியிருக்கிறேன்..சரி. சரி. பதிவிற்குள் வருவோம்.

சிம்பிளா ஒரு டிராப்டவுன் மெனு உருவாக்கலாம் வாங்க என்று உங்களை அழைத்தமைக்கு இங்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.. நமது வலைப்பூவில் ஒரே மாதிரியான பதிவுகளை, தொடர்பதிவுகளோ, தொடர் கதைகளோ எழுத நேரிடும்.. அவ்வாறு எழுதும்போது அந்த பதிவுகளின் முன்னைய பதிவுகளை இந்த டிராப் டவுன் மெனுகொண்டு எளிதாக ஒரே இடத்தில் காட்டலாம்.. விரும்பினால் ஒவ்வொரு பதிவிலும் கூட இத்தகைய டிராப் டவுன் மெனுவை காட்டலாம்.

இதோ அதற்கான கோடிங்..


<em><select onchange="javascript:window.open
(this.options[this.selectedIndex].value);"> <option value="Label url">Label Name</option> <option value="Post one url">Post one Name</option> <option value="Post two url">Post two Name</option> <option value="Post three url">Post three Name</option> <option value="Post four url">Post four Name</option> </select></em>கோடிங்கிற்கான OUTPUT இது:


இந்த கோடிங்கை நீங்கள் போஸ்ட் செய்யும் பாக்சை HTML மோடில் வைத்து பேஸ்ட் செய்யவும். அதற்கு பிறகு  கோடிங்கில்  உள்ள label url என்பதை நீங்கள் எந்த வகையில் (catagery) or label  - ல் எழுதியிருக்கிறீர்களோ, அந்த லேபிளின் பெயரைக் கொடுக்கவும்.

Post a Comment

0 Comments