Wednesday, April 25, 2018

அவசர காலங்களில் போன் செய்ய Emergency Call Settings செய்வது எப்படி?

settings to make call when phone is locked for emergency


போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு ஒரு தகவல்:-

நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து தகவல் அளிக்கலாம். உங்கள் போனில் செய்யவேண்டியது இதுதான்.

போனில் உள்ள contacts ல் groups என்ற option இருக்கும்... அதை ஓபன் செய்து அதில் ICE- Emergency contacts ல் உங்கள் பெற்றோர், சகோதரர், உறவினர் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் எண்களை save செய்து கொள்ளுங்கள்.

போன் லாக்கில் இருக்கும் போது லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக்
செய்தால் number pad open ஆகும். அதில் உள்ள contact symbol ஐ க்ளிக் செய்தால் அதில் Save செய்யப்பட எண்கள் காண்பிக்கும். அந்த எண்ணிற்கு, அதே மொபைலிலிருந்து Call செய்து, தகவல் அளிக்க முடியும்.

இந்த அதி முக்கியத்துவமான தகவல்களை மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள். கூடவே நீங்களும் உங்களுடைய போனில் மறக்காமல் இந்த செட்டிங்சை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஆபத்து, விபத்துக் காலங்களில் இதுபோன்ற செட்டிங்ஸ் - செயல் பேருதவியாக இருக்கும். இந்த தகவலை மறக்காமல் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Tags: Emergency, Screen lock, Emergency Contacts.

No comments:

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!