ட்விட்டர் ஆன்ட்ராய்டு டிவி ஆப் - அறிமுகம்


ட்விட்டர் - உலக மக்கள் பலர் விரும்பி பயன்படுத்தும் சமூக வலைத்தளம். இதன் சிறப்பம்சமே பதியப்படும் தகவலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எழுத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

140 கேரக்டர் என்ற TEXT மெசேஜ் கட்டுப்பாட்டை தகர்த்து அதனுடன் வீடியோ, படங்கள், GiF இமேஜ்களையும் ட்வீட்டில் சேர்க்கும் வசதி கொடுத்து அசத்தியது ட்விட்டர்.

இதன் அடுத்த கட்டமாக "ஆன்ட்ராய்ட் டிவி" க்கான "ட்விட்டர் ஆப்" அறிமுகம் செய்துள்ளது.

twitter app for android tv

image credit : android authority

ஆன்ட்ராய்ட் டிவி ட்விட்டர் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி:


இதன் மூலம் ட்விட்டரில் அப்டேட் செய்யப்படும் தகவல்கள், அதன் வழியாக ஒளிப்பரப்படும் நேரடி வீடியோ போன்றவற்றை பார்த்திடலாம்.

இதற்கு முன்பு ட்விட்டர் Apple TV,  Fire TV, மற்றும் Xbox One போன்றவற்றிற்கு 'ஆப்' வெளியிட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ஃபாலோயர் QR கோட்

ட்விட்டரில் மற்றவர்கள் உங்களை ஃபலோ செய்ய Follow பட்டனை அழுத்த வேண்டும். அதற்கு ஈடாக QR கோட் ஒன்றினையும் ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

 profile > gear > QR code என்ற வழியில் உங்களுக்கான QR Code -ஐ உருவாக்கிகொள்ள முடியும். அதை ஸ்கேன் செய்வதன் மூலமாக மற்றவர்கள் உங்களை  ஃபாலோ செய்துகொள்ள முடியும்.

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!