கால் ஆம்புலன்ஸ் - எமர்ஜென்சி ஆன்ட்ராய்ட் ஆப்

திடீரென ஏற்படும் விபத்துகளில் விரைவாக சிகிச்சைக்கு எடுத்துச் சென்றிட பயன்படும் சேவை "ஆல்புலன்ஸ்" சேவை. விபத்தால் பாதிக்கபட்டவரை காப்பாற்றிட ஆம்புலன்சிற்கு போன் செய்த பிறகு , அது வந்து சேர சில நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதுண்டு.

காரணம் போக்குவரத்து மற்றும் சுற்றுப் பாதையில் வருவதால் உயிர்சேதம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

emergency android app

அவற்றைத் தவிர்த்திட, உடனடியாக அருகில் உள்ள அவசர சிகிச்சை ஊர்தியை வரவழைத்திட உதவுபவை Emergency Android App.

அதுபோன்றதொரு அற்புதமான, பயனுள்ள ஆண்ட்ராய்ட் "எமர்ஜென்சி ஆப்" Call Ambulance.

கால் ஆம்புலன்ஸ் ஆப் டவுன்லோட் செய்திட சுட்டி: 

இந்த ஆப் மூலம் விபத்து நடந்த பகுதி, அதன் அருகில் இருக்கும் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவமனை, தயாராக இருக்கும் மருத்துவர்கள் மற்றும்  பிளட் டொனேட்டர் குழு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். விபத்து நடந்த பகுதியை இந்த ஆப் மூலம் டிரேஸ் அவுட் செய்து உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.

"கால் ஆம்புலன்ஸ் ஆப்" எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ


இதன் மூலம் விபத்தில் காயமானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரை காப்பாற்றிடலாம்.

சமீபத்தில் தமிழக முதல்வர் Tamilnadu Ambulance, Fire, Police துறைகளை தொடர்புகொள்ள "Avasaram Emergency App" வெளியிட்டுள்ளார். அருகில் உள்ள 108 ஆம்புலன்சை அழைத்திட, ஃபயர்சர்வீசை தொடர்புகொள்ள, போலிசை தொடர்புகொள்ள இந்த ஆப் உதவும்.

அவசரம் ஆப் இன்ஸ்டால் செய்திட சுட்டி :


0comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!