கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்

கம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா? "மௌஸ்" தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில "Computer Keyboard Shortcuts'' இதோ...

tamilil computer tips

கம்ப்யூட்டர் ஷார்ட்-கட்ஸ்

    • ஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய "ஹைபர் லிங்க்" ஆக்கணும்னா Ctrl+ Kஅழுத்தினால் போதும்.
    • Shift+ F3 அழுத்தி எழுத்துக்களை "Small to CAPS" "CAPS to Small" க்கு மாத்தலாம்.
    • Windows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம்.
    • விண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும்.
    • F7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம்.
    • Ctrl+Shift+Esc அழுத்தி "டாஸ்க் மேனேஜர்" திறக்கலாம்.
    • இணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும்.
    • பிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab.
    • Alt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்.
    • Alt + Tab அழுத்தினால் ஒரு விண்டோவிலிருந்து அடுத்த விண்டோவிற்கு செல்ல முடியும்.

கம்ப்யூட்டர் பாகங்கள்:


கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டால் அவசரத்திற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நம்மால் முடிந்த அளவிற்கு அதை சரிசெய்திட முடியும். வெளியே தெரியும் மௌஸ், கீபோர்ட், ஸ்கிரீன் மட்டுமில்லாமல், CPU க்குள் இருக்கும் சில பாகங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.

Mother Board, RAM, Processor, SMPS, Hard Disk, DVD போன்றவை அதில் இருக்கும் சில முக்கியமான பாகங்கள். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள "கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் புத்தகம்" உதவும். 

அப்புறம் கணினி எப்படி உருவானது? அதனோட வரலாறு என்ன? இதையெல்லாம் தெரிந்துகொண்டால் அதைப் பற்றிய புரிதல், இன்றைய கம்ப்யூட்டர் எத்தனை நிலைகளை கடந்து வந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் உண்டாகும்.

Search Terms :

0comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!