திருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க


கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் உபகோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

ஆன்ட்ராயிட் சாதனங்களில் உள்ள சேவைகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் கோடிக்கணக்கானவர்கள் “ஸ்வைப்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றில் எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், கூடவே சில சிக்கல்களும் இல்லாமல் இல்லை.

android device manager

ஆன்ட்ராயிட் பயனர்களை உற்று கவனித்தோமென்றால் அவர்களிடம் எப்போதுமே ஒரு மெல்லிய பயம் தொற்றிக் கொண்டிருப்பதை உணர முடியும். எங்கே கீழே விழுந்துவிடுமோ, தொலைந்து போனால் என்ன செய்வது? யாராவது திருடிக் கொண்டு போனால் எப்படி மீட்பது? போன்ற கேள்விகள்தான் அவர்களின் பயத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஏனெனில், மற்ற போன்கள் திருடு போகும் போது ஏற்படுகிற விளைவுகளைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்கள் தொலையும்போது ஏற்படுகிற விளைவுகள் அதிக இழப்பைத் தரக்கூடியவை.

ஆன்ட்ராய்ட் அல்லாத ஒரு சாதாரண மொபைல் காணாமல் போகிற பட்சத்தில் அதில் உள்ள காண்டாக்ட் டீட்டெயில்ஸ், சில தரவுகள் பறிபோகக்கூடும், இன்னும் அதிகம் சொல்லப்போனால் சேமித்து வைத்திருந்த உங்களுடைய ஸ்வீட் ஹார்ட்களின் எஸ்.எம்.எஸ்.களை பறிகொடுக்க நேரலாம்.

இதுவே ஸ்மார்ட் போன்களாக இருக்கும் பட்சத்தில், நமக்கு ஏற்படுகிற இழப்புகள் அனைத்துமே ஈடுசெய்ய முடியாதவையாக மாறிவிடுகிறது.

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய நவீன உலகில், அன்றாட வேலைகளைத் திட்டமிடுதலில் ஆரம்பித்து வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் வரை அனைத்தையுமே ஸ்மார்ட் போன்களுக்குள் அடக்கி விடுகிறோம்.

மேலும் இ மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளக் கணக்குகளை இயல்பாகவே இயங்குகிற அளவிற்கு டிஃபால்ட் ஆப்ஷனில் வைத்து விடுகிறோம். நம்முடைய ஒவ்வொரு அசைவுகளின் பிரதியையும் ஸ்மார்ட் போன்கள் பதியம் செய்யத் தொடங்கி விடுகிறது.

இவையே ஒரு கட்டத்தில் நமக்கான டிஜிட்டல் புரூஃப் ஆகவும் மாறிவிடுகிறது. போனை லவட்டி செல்பவர்கள் ஒரேயொருமுறை ஃப்ளாஷ் அடித்துவிட்டால் போதும் மொபைலில் ராம்ஐ முடக்கி அதை அவர்களது ஆக்கிவிடுவார்கள். இப்படி ஃப்ளாஷ் அடிப்பதன் மூலம் எவ்வளவு பெரிய தேடுதல் வேட்டையிலிருந்தும் அவர்கள் எளிதில் எஸ்கேப் ஆகிவிட முடியும்.

இதைத் தடுக்க வழியே இல்லையா என்று ஸ்மார்ட் போன் பயனர்களின் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துள்ளது. “ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர்’ அப்ளிகேஷன். கூகிளின் கண்டுபிடிப்பான அந்த அப்ளிகேஷன் எல்லா ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் இயல்பாகவே இனி இடம்பெற்றிருக்கும்.

மொபைலில் இதை பயன்படுத்த நமது இமெயில் ஐடியை பதிவு செய்வது அவசியம். கூகிள் செட்டிங்ஸ் என்றிருக்கும் ஆப்ஷனுக்கு சென்று ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேஜேனரை ஆக்டிவேட் செய்து வைத்துக் கொள்ளவும்.

மொபைல் திருடுபோய்விட்ட சூழ்நிலையில் https://www.google.com/android/find  என்னும் இணையதளத்திற்குச் சென்று அங்கு நமது இமெயில் ஐடியை கொடுத்தோமெனில், நமது மொபைல் பற்றிய தகவல்கள் எளிதில் கிடைத்துவிடும்.

மேற்சொன்ன வலைப்பக்கமானது கூகிள் மேப்ஸ் போன்ற தோற்றத்தில் இருக்கும். அந்தப் பகுதியில் ஏற்கெனவே மொபைலில் நாம் கொடுத்திருந்த இமெயில் ஐடியை கொண்டு லாக்இன் செய்யும்போது அடுத்த நிமிடமே நமது மொபைலுக்கும் நமக்கும் இணைப்பு ஏற்பட்டுவிடும்.

ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் வலைப்பக்கத்தில் உள்ள மேப் ஏரியாவில் களவுபோன ஸ்மார்ட்போன் சரியாக எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஒரு சிவப்பு நிறக்குறி சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். திருடுபோன அடுத்த சில நிமிடங்களில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் நாம் மொபை இருக்கும் இடத்திற்கே சென்றுவிடலாம்.

அப்படிச் செல்லும்போது இணையவசதியுள்ள இன்னொரு மொபைல் போனை கையில் கொண்டு செல்வது நல்லது. மேப்பில் ஆன்ட்ராய்ட் மேனேஜர் காட்டும் பகுதிக்கு அருகில் நின்று கொண்டு, நம்மிடம் இருக்கும் இணைய வசதியின் மூலம் திருடு போன மொபைலை அலாரம் அடிக்க வைக்கலாம்.

வேறு ஒரு சிம் மாற்றி இருந்தாலும் மொபைல் சைலண்ட் மோடில் இருந்தாலும் அந்த அலாரம் அதிக சத்தத்தோடு ஒலிக்கும். அதை வைத்தே நாம் தொலைகிற மொபைலை கண்டுபிடித்து விடலாம்.

நாம் இருக்கிற இடத்திலிருந்து திருடன் இருக்கும் இடத்திற்கு வருவதற்குள்ளாக நமது ஸ்மார்ட் போனை நாமே இயக்குகிற வழமுறையும் இதில் உண்டு. அந்த ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் வலைப்பக்கத்தில் இருக்கும் ரிமோட் ஆக்சஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடன் கையில் இருக்கும் நமது ஸ்மார்ட் போனை அவனுக்குத் தெரியாமலேயே நாம் இயக்க ஆரம்பித்திடலாம்.

அப்படி இயக்கும் போது முதல் வேலையாக வலைப்பக்கத்தில் இருக்கும் 'Enable and Lock' என்ற ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டால் நமது பிரைவசி சார்ந்த விஷயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் காலியாகிவிடும்.

கூடவே நாம் இணையத்திலிருந்தபடியே ஸ்மார்ட் போனின் ஆக்சஸ் கோடையும் மாற்றிவிடலாம். இப்படி செய்வதால்திருடன் நமது மொபைலை பயன்படுத்த முடியாமல் செய்துவிடலாம்.

இந்த ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இன்ஸ்டால் செய்த அடுத்த நிமிடமே மொபைலில் உள்ள ஆப்ஸ் லிஸ்ட்டில் இருந்து இது தன்னை மறைத்துக் கொள்ளும். மற்ற அப்ளிகேஷன்களை நாம் மொபைலில் இன்ஸ்டால் செய்தோமெனில் அவற்றை மொபைலின் ஆப்ஸ் லிஸ்டில் பார்க்க முடியும்.

ஆனால் இந்த அப்ளிகேஷன் அதற்க விதிவிலக்கு. திருட்டுப் போகும்போது அதைக் கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதும் திருடுபவனுக்குத் தெரியாது.

ஆக, கூகிளின் இந்த ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் காணாமல் போகும் ஸ்மார்ட் போன்களை மீட்பதற்கான புதிய அவதாரம் என்றே சொல்லலாம். நீங்களும் டவுன்லோட் செஞ்சுக்கங்க பாஸ்!

Source: Dinamalar

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!