குரோம் பிரௌசரில் Aw Snap பிழை காட்டுதா? இதோ தீர்வு !குரோம் பிரௌசரை பயன்படுத்துபவர்கள் எப்பொழுதாவது இந்த பிரச்னையை சந்தித்தே இருப்பார்கள்.   அது Aw, Snap பிழை.  பிழையை கட்டாயம் சந்தித்திருப்பீர்கள்.  ஏதாவது ஒரு இணையதளத்தை திறக்கும்பொழுது இதுபோன்ற பிழைச்செய்தி தோன்றியிருக்கும். மீண்டும் அந்த பக்கத்தை ரெஃப்ரஸ் செய்தால் சரி ஆகியிருக்கும். இதற்கு காரணம் என்ன? இது போன்ற பிழை நிரந்தரமாக வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துகொள்வோம்.
aw snap error clearing

முதலில் இந்த பிழை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.

1. பிரௌசர் கேட்சி மெமரி குறைவாக இருப்பது.
2. இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருப்பது
3. ஹார்ட் டிஸ்க் பிரச்னை
4. பிரோசர் பிளகின்ஸ்

இந்த காரணங்களால் Aw, Snap பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் முதலில் இந்த பிரச்னைகள் ஏதும் உள்ளதா என சோதித்துவிட வேண்டும்.

இன்டர்நெட் கனெக்சன் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொண்டு, கூகிள் குரோம் பிரௌசர் இன்டர்நெட் ஹிஸ்டரியை கிளியர் செய்ய வேண்டும்.

இதற்கு கூகிள் குரோம் பிரௌசர் வலது மூளையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி செட்டிங்ஸ் கிளிக் செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ் பக்கத்தில் Scroll செய்து பார்த்தால் Advanced Settings இருக்கும்.
அதை கிளிக் செய்து, வரும் பக்கத்தில் Clear Browsing Data என்பதை கிளிக் செய்தன் மூலம் பிரௌசிங் ஹிஸ்டரை கிளியர் செய்துகொள்ள முடியும்.

ஆன்ட்டி வைரஸ்

ஆன்டி வைரசால் கூட சில சமயம் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். குறிப்பிட்ட அந்த வெப்சைட்டை ஆன்ட்டி வைரஸ் பிளாக் செய்து இருக்கும். அப்படி இருப்பபின் அந்த வெப்சைட்டை பார்வையிடும்பொழுது மட்டும் ஆன்ட்டி வைரஸை டிஆக்டிவேட் செய்துவிட வேண்டும்.

சில சமயம் வேண்டாத சில சாப்ட்வேர்களாலும் இதுபோன்று நிகழலாம். குரோம் கிளீன் அப் டூல் மூலம் அதை கண்டறிந்து நீக்கிவிட முடியும்.

சில நேரங்களில் கூகிள் குரோம் ரெப்ரஸ் செய்தால் கூட போதுமானது. அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும். இதை செய்தும் கூட பிரச்னை சரியாகவில்லை என்றால், கூகிள் குரோம் பிரௌசரை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, பிறகு புதியதாக இன்ஸ்டால் செய்ய வேண்டியதுதான். பிரௌசரை அன் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு, கண்டிப்பாக பிரௌசரில் உள்ள புக்மார்க்கை பேக்கப் எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.

Tags: google chrome error, Aw snap Error, Chrome Aw Snap Error.


0 comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!