அந்தரங்கத்தை பதிவு செய்யும் பல்பு வடிவ கேமிரா !பல்பு வடிவ வைபை கேமரா வெளிவந்துள்ளது. பெரிய ஹோட்டல்கள், மால்கள் என அதுபோன்ற கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உடை மாற்றும் அறைகளில் வைக்கப்பட்டு, பெண்களின் அந்தரங்களை வீடியோவாக பதிவு செய்யும் மோசமான செயலும் நடந்து கொண்டிருக்கின்றன.

கதவு கைப்பிடி, முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவைகளில் வைக்கப்பட்ட ரகசிய கேமிராக்கள் போய் தற்பொழுது புதிய பல்பு வடிவ கேமராக்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பபடும் CC TV கேமிராக்கள் போல உள்ள இந்த கேமராவானது 16 அடி உயரத்திலிருந்து கூட கீழே உள்ளவற்றை துல்லியமாக வீடியோ பதிவு செய்யக்கூடியது. இதன் மூலம் எடுக்கப்படும் வீடியோ 960P HD தரத்தில் இருக்கும்.

bulb cctv camera

இரவிலும் தெளிவான பதிவை தரக்கூடியது. எனவே பெண்கள் தனியார் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் உடைமாற்றும் அறைகள், குளியல் அறைகளில் இதுபோன்ற கேமிராக்கள் உள்ளதா கண்காணிக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் உடனே கஷ்டமர் கேருக்கு போன் செய்து கூற வேண்டும். அப்படி போன் செய்யும்போது உங்களுக்கு எதிர்முறையில் வித்தியாசமான சப்தம் அல்லது பதில் ஏதும் வரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

கேமிரா எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

1 Comments:

  1. இது போன்ற கண்டுபிடிப்புகளை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

    ReplyDelete

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!