YouTube மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க !


யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது சுலபம். தேவை ஒரு ஜிமெயில் அக்கவுண்ட். ஒரு  கேமிரா / மொபைல் கேமிரா. அதன் வழியாக எடுக்கப்பட்ட பயனுள்ள சுவராஷ்யமுள்ள வீடியோக்கள்.

யூடியூப் பற்றி தெரியாதவர்கள் இல்லை. வீடியோ பார்க்க உதவும் கூகிள் இணையதளம். இன்று 4G நெட்வொர்க் வந்த பிறகு, ஒவ்வொருவர் கையிலும் அதிவேக இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் உள்ளது. அதனால் இணையத்தைப் பயன்படுத்தும், யூடியூப் வழியாக வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

earn lot of money with youtube

வீடியோ பார்க்க மட்டும்தானா யூடியூப்? இல்லை. அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் செய்யலாம்.

எப்படி?

உங்களுடைய சொந்த வீடியோவை யூடீயூபில் அப்லேட் செய்து பார்வைகளை பெறுவதன் மூலம் கூகிள் ஆட்சென்ஸ் வழியாக பணம் சம்பாதிக்கலாம். 

நீங்க உங்களோட மொபைல் மூலம் எடுத்த வீடியோக்கள்... உங்கள் கண்முன்னே நகைச்சுவையான சம்பவங்கள்...குழந்தைகளின் குறும்புத்தனங்கள்....இயற்கைக் காட்சிகள்... விலங்குகளின் நடவடிக்கைகள்....இப்படி உங்களுக்குத் தோன்றுகிற காட்சிகளை அப்படியே நீங்கள் வீடியோவாக பதிவு செய்வீர்களல்லவா?
அந்த வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் அப்லோட் செய்துவிடலாம். அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிக ஹிட் வாங்கினால் உங்கள் காட்டில் பணமழைதான் போங்க...

வீடியோக்களுக்கு சில மேக்கப் வேலைகள் செய்தால் இன்னும் சிறப்பா இருக்கும். அதற்கு பயன்படுபடுவை வீடியோ எடிட்டிங் சாப்வேர்கள்.

நம்முடைய சாப்ட்வேர் தளத்திலும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் பத்தின பதிவுகள் ஒன்றிரண்டு இருக்குங்க...


இந்த பதிவுல நல்லதொரு வீடியோ எடிட்டிங் சாப்வேர் இது.. வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீங்க..இந்த சாப்ட்வேர் மூலமா வீடியோ கன்வர்டிங் கூட செய்யலாம். அதாவது ஒரு பார்மேட்ல இருக்கிற வீடியோவை மற்றொரு பார்மேட்டுக்கு ஈசியா மாற்ற முடியும். 

இப்படி நீங்கள் எடிட் பண்ணி அழகூட்டின வீடியோவை YouTube தளத்தில் அப்லோட் பண்ணலாம். 

அதுக்கு உங்க்கிட்ட google account இருக்கணும்.. இப்பதான் எல்லோரும் ஜிமெயில் யூஸ் பன்றோமே.. அது இருந்தாலே போதும். 

இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். இங்கிலீஸ்ல தலைப்பு வச்சா இன்னும் சூப்பரா இருக்கும். அதுதான் நிறைய வியூஸ் கொண்டுவரும்..தலைப்பு சிம்பிளா இருந்தாலே போதும். 

வீடியோவில் எதைப்பற்றியது என்று கூறிப்பிட Description பகுதியில் சொல்லுங்கள். 

Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். 

இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.

அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.

அதற்கான சுட்டி:  YouTube Partner Program: Interest Form - http://www.youtube.com/partners/contact_info?page=start&partner_type=C

இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

Adsense Approval கிடைத்தவுடன் உங்கள் வீடியோ பிளே ஆகும்போது Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்.

1. Overlay in-video ads  - இந்த டைப் விளம்பரம் வீடியோவின் கீழ்பகுதியில் காட்டப்படும் விளம்பரம். சிறியது. 

TrueView in-stream ads – இந்த டைப் விளம்பரமானது வீடியோ ஒளிபரப்புவதற்கு முன்பு சில நொடிகள் அட்வான்சாக தோன்றும் விளம்பரம். 

நீங்க எத்தனை  வீடியோக்கள்  upload செய்றீங்கன்னு பொறுத்துதான்  உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ப தான் வருமானம்தான் கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப கம்மியாதான் இருக்கும். 

எந்தெந்த  மாதிரியான வீடியோக்களை Upload செய்யலாம் ? 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான்.... சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.

ஆங்கில அறிவு இருந்தால் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் தமிழ் வீடியோக்கள் பார்வையிடும் வீதம் குறைவாகவே இருக்கும்.

எப்படி யூடியூப்ல் வீடியோ அப்லோட் செய்வது என்பது குறித்து ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் தெளிவாக வீடியோ பதிவிட்டிருக்கிறார். பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முக்கியமான குறிப்பு: 

சினிமா படம், சினிமா பாடல்..வீடியோக்களை இதில் பயன்படுத்த கூடாது. அப்படி நீங்கள் ஏதாவதுத எடிட்டிங் செய்து பயன்படுத்தினாலும் அதற்கு ஆட்சென்ஸ் வருமானமெல்லாம் கிடைக்காது. . எந்த வீடியோவாக இருந்தாலும் உங்கள் சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்...

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்த கூடாதுங்க... காரணம் அந்த ஆடியோ ஸ்வாப் வசதியைப் பயன்படுத்துற வீடியோவுக்கு காட்டப்படற வீளம்பரங்களுக்கான வருமானம் சத்தியமா உங்க கணக்குல வந்து சேராது.. அது கூகிள் கணக்குலதான் போய் சேரும்.

Update: தற்பொழுது 10000 வியூஸ் பெறும் யூடியூப் வீடியோ மட்டும் கூகிள் ஆட்சென்ஸ் வழியாக பணம் சம்பாதிக்கும் தகுதியை பெறுகிறது. எனவே நல்ல தரமான வீடியோக்கள் பதிவிடுவதுடன், அதிக வியூஸ்களையும் பெறவேண்டும். மற்ற வீடியோக்களை monetize செய்தாலும், அதில் விளம்பரங்கள் தெரியாது. 

Tags: YouTube videos, YouTube money, money making from YouTube videos, money making with adsense in YouTube, YouTube money making tips, video recording tips, video upload, adsense revenue from YouTube, money making from your own video,