இலவச போட்டோ மிக்சிங் மென்பொருள்போட்டோவை அழகாக மாற்ற, ஸ்கிராப் புக் போன்று அமைக்க, கோலாஜ் போட்டோஸ் உருவாக்கிட பயன்படும் மென்பொருள் போட்டோ மிக்சிங் (Photo Mixing software).   எளிமையான பயனர் இடைமுகம். அதனால் பயன்படுத்துவது மிக சுலபம்.

போட்டோ மிக்சிங் மென்பொருள் பயன்படுத்துவது எப்படி?


 • முதலில் சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 
 • இன்ஸ்டால் செய்த போட்டோமிக்சிங் புரோகிராமை திறந்திடவும்.
 • வலது பக்கத்தில் இடம்பெற்றுள்ள டெம்ப்ளேட்களில் ஏதேனும் ஒன்றினை கிளிக் செய்யவும்.
 • இடது புறம் அந்த ப்ரேம்கள் காட்சி அளிக்கும். 
 • பிறகு File கிளிக் செய்து ஓப்பன் கொடுத்து, உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்களை அந்த பிரேம்களில் டிராக்-டிராப் செய்திடுங்கள்.
 • உங்களுக்கு விருப்பமான Collage Photos தயார். 
 • இப்பொழுது File=Save image கொடுத்து போட்டோவை சேமித்திடவும். 


photomix software for free 2017


மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய:  PHOTO MIX SOFTWARE

குறைந்த அளவு கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்வது சுலபம். பயன்படுத்துவது அதைவிட எளிது.

போட்டோ மிக்ஸ் மென்பொருள் பயன்கள்:

 • உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் மாற்றிக்கொள்ள முடியும்.
 • போட்டோக்களை வேறொரு போட்டோவுடன் இணைக்க முடியும்.
 • போட்டோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்க முடியும்.
 • பல்வேறு போட்டோக்களை இணைத்து (Collage Photos) அதை ஓவியம் போல மாற்றலாம். 
 • வால்பேப்பர், சி.டி. கவர், டிவிடி கவர் இப்படி உங்களுக்கு விருப்பமான  கவர்களை நீங்களே டிசைன் செய்யலாம்.
 • இதன் அதி முக்கிய அம்சம், இதன் மூலம் கிராபிக்ஸ் செய்யப்பட்ட போட்டோக்கள் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.
 • கிராபிக் செய்தவை என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரிஜினாலிட்டியுடன் காட்சியளிக்கும்.
 • செய்து முடித்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் எடுத்திடலாம். 
 • அதை நண்பர்களுக்கு E-Mail செய்திடலாம்.
விண்டோஸ் இயங்குதளங்களில் அருமையாக தொழிற்படுகிறது. ஒருமுறை போட்டோ மிக்சிங் மென்பொருளை பயன்படுத்திப் பார்த்த பிறகு, அதை அன்-இன்டால் செய்திட மனம் வராது. அந்தளவிற்கு தரமான போட்டோ கொலாஜ், 
மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் மேற்கொள்ள இந்த இணைப்பில் சொடுக்கவும்.

Tags: easy way to crop, re-size, rotate, enhance, mix and manipulate
photos, to create a wide variety of images.


2Comments:

 1. மிக நல்ல தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்! நன்றி!

  ReplyDelete

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!